குடும்பத்துடன் ஜப்பான் வீதிகளில் வலம் வரும் ஜூனியர் NTR & ராம் சரண்.. செம வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

Advertising
>
Advertising

Also Read | AK62: விக்னேஷ் சிவன் பகிர்ந்த அஜித்தின் VINTAGE போட்டோ.. அந்த லுக்கு தான் ஹைலைட்டே! வைரல்

ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.

இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு.

RRR படம் 1100 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூலாக ஈட்டியது.

இந்த RRR படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி ஒடிடி உரிமையை ஜி5 கைப்பற்றியது. ஹிந்தி மொழி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. அதேபோல் ஆங்கிலம், போர்த்துகீசிய, துருக்கிய, ஸ்பானிய, கொரிய மொழிகளின் ஒடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

இன்று அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஜப்பானுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

நடிகர் ராம் சரண், தனது மனைவி உபசன்னாவுடன் இணைந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்திய இண்டர்நேஷனல் பள்ளிக்கு சென்று பள்ளி மாணவர்களை சந்தித்தனர். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ராம் சரண் & உபசேனாவை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

மேலும் டோக்கியோ நகரின் சாலையில் கையில் ரோஜா பூக்களை ஏந்தி ஜூனியர் என்டிஆர், அவரது மனைவி லட்சுமி ப்ரணதி, ராம் சரண், அவரது மனைவி உபசன்னா ஆகியோர் ஊர் சுற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Also Read | கையில் குழந்தையுடன் நயன்தாரா 😍 நெகிழ்ச்சி பெயின்ட்டிங்கை பகிர்ந்த விக்னேஷ் சிவன்! Viral Photo

தொடர்புடைய இணைப்புகள்

RRR Jr NTR and Ram Charan Roaming with Family in Japan

People looking for online information on Japan, Jr ntr, Ram Charan, RRR will find this news story useful.