“உங்களால காத்திருக்க முடியாதுல்ல...”… ‘RRR’ OTT ரிலீஸ் தேதியை மாற்றிய நெட்பிளிக்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR படத்தின் இந்தி வெர்ஷன் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | ஆர் கண்ணன் இயக்கத்தில் கடவுள் வேடத்தில் யோகிபாபு… TIME TRAVEL வேறயா…வெளியான Title

RRR ரிலீஸூம் வெற்றியும்…

பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள படம் "RRR".  நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளராக கீரவாணி பணியாற்றினார். ரிலீஸூக்குப் பின்னர் RRR படம் உலகமெங்கும் திரையரங்குகள் மூலமாக பாக்ஸ் ஆபீஸீல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அது கவனத்தை ஈர்த்து வருகிறது.

தென்னிந்திய மொழிகளின் ஓடிடி ரிலீஸ்…

RRR திரைப்படத்தின் திரையரங்க வெற்றியை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட வெர்ஷனின் ஓடிடி பிரிமீயர் வரும் மே 20 ஆம் தேதி முதல் ஜி 5 ஓடிடியில் ஸ்ட்ரீமாக உள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜி 5 புதிய ஓடிடி டிரைலரையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த புதிய டிரைலர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

RRR இந்தி வெர்ஷன்….

RRR படத்தின் இந்தி வெர்ஷனை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்த நிலையில் வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் RRR (இந்தி) நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்நிலையில் இப்போது திடீரென மே 20 ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என தேதியை மாற்றி நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக “உங்களால் அவர்களைப் பார்க்க காத்திருக முடியாது என்று சொன்னீர்கள்... எங்களாலும்தான்… RRR திரைபடம் இன்னும் 24 மணிநேரத்தில்” என்று அறிவித்துள்ளது. இந்த முன்கூட்டிய ரிலீஸ் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

RRR Hindi version ott premiere preponed

People looking for online information on Jr ntr, OTT premiere, Ramcharan, RRR, RRR hindi version, SS Rajamouli will find this news story useful.