RRR படத்தின் இந்தி வெர்ஷனின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | "அம்மாவ இருந்துட்டு இப்படி பண்ணலாமா.." ரசிகைக்கு 'நச்' விளக்கம் கொடுத்த நடிகை
RRR ரிலீஸூம் வெற்றியும்…
பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள படம் "RRR". ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளராக கீரவாணி பணியாற்றினார். ரிலீஸூக்குப் பின்னர் RRR படம் உலகமெங்கும் திரையரங்குகள் மூலமாக பாக்ஸ் ஆபீஸீல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அது கவனத்தை ஈர்த்து வருகிறது.
தென்னிந்திய மொழிகளின் ஓடிடி ரிலீஸ்…
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட வெர்ஷனின் ஓடிடி பிரிமீயர் வரும் மே 20 ஆம் தேதி முதல் ஜி 5 ஓடிடியில் ஸ்ட்ரீமாக உள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜி 5 புதிய ஓடிடி டிரைலரையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இந்த புதிய டிரைலர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
RRR இந்தி வெர்ஷன்….
இந்நிலையில் RRR படத்தின் இந்தி வெர்ஷனை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்த நிலையில் இப்போது அதன் பிரிமீயர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் RRR (இந்தி) நெட்பிளிக்ஸின் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இது சம்மந்தமாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கர்ஜனையை கேட்டீர்களா? RRR திரைப்படம் நெட்பிளிக்ஸுக்கு வருகிறது. இந்தியில். நாங்கள் தயார்” எனக் கூறியுள்ளது. ஒரே படம் இரண்டு ஓடிடிகளில் அடுத்தடுத்து குறுகிய இடைவெளியில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8