'RRR' ஆலியா பட் விலைமாதுவாக நடிக்கும் புதிய படம்! படக்குழு அறிவித்த புதிய ரிலீஸ் தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: RRR அலியாபட் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

RRR Alia Bhatt Gangubai Kathiawadi Movie New Release Date
Advertising
>
Advertising

RRR படத்திற்கு பின் இந்த படத்தில் அலியா பட் நடித்துள்ளார். கங்குபாய் கதியாவாடி என இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார். பயோகிராபி கிரைம் டிராமாவாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் ஹுசைன் ஜைதியின் "மும்பையின் மாஃபியா குயின்ஸ்" என்ற புத்தகத்தின் ஒரு அத்தியாயத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

RRR Alia Bhatt Gangubai Kathiawadi Movie New Release Date

கதியாவாட்டின் எளிய பெண்ணான கங்கா ஹர்ஜிவந்தஸ், காமாதிபுராவின் சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய டானாக  கங்குபாய் எப்படி மாறுகிறாள் என்பதே படத்தின் கதை. "கங்குபாய் கோதேவாலி என்ற இளம்பெண்ணை விபச்சாரத்திற்கு விற்பது முதல் பின் அவள் எப்படி காமாதிபுராவில் உள்ள ஒரு விபச்சார விடுதியின் மேடமாக மாறுகிறாள் என்பது வரை".

இப்படத்தில் சாந்தனு மகேஸ்வரி, விஜய் ராஸ், சீமா பார்கவா பஹ்வா, இந்திரா திவாரி மற்றும் வருண் கபூர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர், அஜய் தேவ்கன், ஹுமா குரேஷி மற்றும் இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் சிறப்பு கேமியோக்களில் நடித்துள்ளனர். இந்த படம் முதலில் 11 செப்டம்பர் 2020 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, பின்னர் 30 ஜூலை 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது, அதன் பிறகு இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கங்குபாய் கத்தியவாடி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த பாகுபலி பிரபாஸ்!

பின்னர் 6 ஜனவரி 2022 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் S. S. ராஜமௌலியின் இயக்கத்தில் அலியா பட நடித்துள்ள RRR படத்துடன் மோதலைத் தவிர்க்க, வெளியீடு பிப்ரவரி 18க்கு மாற்றப்பட்டது. இப்படம் இறுதியாக 2022 பிப்ரவரி 10 முதல் 20 வரை நடைபெறவிருக்கும் 72வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் வெளியீடு பிப்ரவரி 18ல் இருந்து ஒரு வாரம் தள்ளி 25 பிப்ரவரி 2022 அன்று இந்தியிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டைய கிளப்பிய அதிதி ஷங்கர்! இது வேறமாரி போட்டோஷூட்.. மிரளும் ரசிகர்கள்

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

RRR Alia Bhatt Gangubai Kathiawadi Movie New Release Date

People looking for online information on Alia Bhatt, அலியாபட், Gangubai Kathiawadi, RRR will find this news story useful.