உலக அளவில் சாதனை படைத்த தனுஷ் - யுவன் காம்போவின் ‘ரவுடி பேபி’!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ்-சாய் பல்லவி நடித்த ‘மாரி 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் தான் அதிக முறை யூடியூபில் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்த 'மாரி 2' படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் வரும் ‘ரவுடி பேபி’ பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நடனப்புயல் பிரபுதேவா நடனம் அமைத்து தனுஷ்-சாய் பல்லவி இருவரும் சேர்ந்து பட்டையை கிளப்பிய ‘ரவுடி பேபி’ பாடல் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பில்போர்ட் இசை பட்டியலில் இடம்பிடித்தது. யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் தமிழ் பாடல் என்ற சாதனையை ‘ரவுடி பேபி’ பாடல் நிகழ்த்தியது.

இந்த 2019ம் ஆண்டின் டாப் 10 மியூசிக் வீடியோ பட்டியலில் தனுஷின் ‘ரவுடி பேபி’ பாடல் 7வது இடத்தை பிடித்து மீண்டும் புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய பாடல் என்ற பெருமையையும் இப்பாடல் பெற்றுள்ளது. இது குறித்து ‘மாரி 2’ இயக்குநர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலக அளவில் சாதனை படைத்த தனுஷ் - யுவன் காம்போவின் ‘ரவுடி பேபி’! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rowdy Baby Video song in Top 10 most viewed music videos in World 2019

People looking for online information on Balaji Mohan, Dhanush, Maari 2, Prabhu Deva, Rowdy Baby, Sai Pallavi, Yuvan Shankar Raja will find this news story useful.