விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரோஷ்னி ஹரிப்ரியன்.
பாரதி கண்ணம்மா தொடரில் இதற்கு முன்பு கண்ணம்மாவாக வந்த ரோஷ்னியின் நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் அவரை கொண்டு சேர்த்திருந்தது.
அதிலும் குறிப்பாக, அவர் கோபத்தில் வீட்டை விட்டு கிளம்பி பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றது தொடர்பான காட்சிகள், இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து ஒதுங்கிய ரோஷ்னி ஹரிப்ரியன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், முழுக்க முழுக்க சிரித்துக் கொண்டே ரோஷ்னி வலம் வந்தது, ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்நிலையில், தற்போது Behindwoods TV நேயர்களுக்கு பிரேத்யேகமான பேட்டி ஒன்றை மிகவும் ஜாலியாக அளித்துள்ளார் நடிகை ரோஷ்னி ஹரிப்ரியன்.
இந்த நிகழ்ச்சியில், மிகவும் வேடிக்கையாக பதிலளித்து பேசிய ரோஷ்னி, தனக்கு வர போகும் மாப்பிள்ளை பற்றி பேசுகையில், "நல்ல மனிதராக இருந்தால் போதும். நல்லபடி பார்த்துக் கொள்ள வேண்டும்" என கூறினார். தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் பற்றி பேசிய ரோஷ்னி, ஒரே ஒரு முறை குலாப் ஜாமூனை தவறாக செய்ததால் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து விவரித்திருந்தார்.
அதே போல, குக் வித கோமாளிக்கு பிறகான வாழ்க்கை குறித்து பேசிய ரோஷ்னி, "இந்த அனுபவமே எனக்கு மிகவும் புதியதாக இருந்தது. அந்த விதத்தில் குக் வித் கோமாளி எனக்கு நிறைய சொல்லி கொடுத்தது. அதன் பின்னர், எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது. நிறைய கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் நல்ல செய்தி சொல்கிறேன்" என கூறினார்.
இது தவிர இன்னும் பல அசத்தலான விஷயங்களை மிகவும் ஜாலியாக ரோஷ்னி பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான முழு வீடியோவைக் காண: