ஆரம்பம் ஆகிடுச்சு குக் வித் கோமாளி சீசன் 3 - போட்டியாளர்கள் யார் யார்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எப்போது  வெளியாகும் என அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கும் 'குக் வித் கோமாளி' சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது அதற்கான புதிய ப்ரோமோ ஒன்றி வெளியாகியுள்ளது.

Roshini who made an entry in Cook with Clomali Season 3
Advertising
>
Advertising

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்திருந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் பேராதரவை பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த வகையில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் இந்நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

Roshini who made an entry in Cook with Clomali Season 3

தமிழ் தொலைக்காட்சிகளில் சமையல் குறிப்பு குறித்து தனி நிகழ்ச்சியே நடக்கும். குழந்தைகளுக்கு பிடித்த உணவுகள், எதை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதை பற்றி விவாதிக்கும் நிகழ்வுகள் அதிகம். இதை காட்டிலும் ஒரு உணவகத்தை தேர்ந்தெடுத்து அந்த உணவகத்தில் எது ஷ்பெஷலான ரெசிப்பி என்பதை கேட்டறிந்து பொதுமக்களுக்கு சமைக்க உதவும் வகையில் குறிப்பெடுத்து சொல்வது போன்றுதான் ஒளிபரப்பாகியுள்ளன.

இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இதில் வரும் கோமாளிக்கு இணையாக காமெடி செய்கிறார்கள் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்த வெங்கடேஷ் பத் மற்றும் தாமு. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்னைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

குக் வித் கோமாளி மூலம் மக்களின் மனதை வென்றவர்களில் புகழ் முக்கிய பங்கு வகிக்கிறார். வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதேபோன்று அஸ்வின் குமார் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஷிவாங்கி நல்ல சிங்கராக பார்த்த மக்களுக்கு, தனது வீட்டில் ஒரு மகள் இருந்தால் இப்படித்தான் இருப்பார் என்ற அளவிற்கு தனது குடும்பத்தில் ஒருவராக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் ஆரம்பம் ஆகிறது. இதற்கான புரோமோ சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த புரோமோ வெளியானதைத் தொடர்ந்து பலரும் தங்களுடைய சந்தோஷத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இம்முறை குக்காக நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வந்த நிலையில், புதிய ப்ரோமோ ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து  ரோஷினி விலகியதை நினைத்து ரசிகர்கள் வருந்தினாலும் இனி அந்த கவலை வேண்டாம். வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் விதவிதமான சமையலை செய்து சிரிக்கை வைக்கவுள்ளார்.
ரோஷினி, சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிராஸ் கருணாஸ், என 8 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, குரேஷி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், சுனிதா உள்ளிட்டோர் கோமாளிகளாக களமிறங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Roshini who made an entry in Cook with Clomali Season 3

People looking for online information on Bala, Bharathi Kannamma, Cook with comali 3, Dharshan, Manimegalai, Manobala, Roshini, Shivangi, Vijay tv will find this news story useful.