RJ விக்னேஷ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் ராஜ்மோகன் இயக்கும் பாபா பிளாக் ஷீப்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Romeo Pictures ராகுல் தயாரிப்பில் பிரபல பேச்சாளர் தமிழார்வலர், நடிகர் ராஜ் மோகன் இயக்கும் திரைப்படம் “பாபா பிளாக் ஷீப்”.

Advertising
>
Advertising

Also Read | ஆயிஷா எலிமினேஷன் ஆனதுக்கு கைதட்டினாரா விக்ரமன்..? ரசிகர்களின் விளக்கம்! Bigg Boss 6 Tamil

அண்மையில் அஞ்சலி நடிப்பில் வெளியான ஃபால் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராஜ் மோகன் அறிமுக இயக்குநராக இயக்கும் இந்த “பாபா பிளாக் ஷீப்” படத்தின்  படப்படிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்" படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷீப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில், சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.



இப்படத்துக்கு எடிட்டிங்கை விஜய் வேலுக்குட்டி மேற்கொள்ள கலை இயக்குநராக மாதவன் பணிபுரிகிறார். ஸ்டன்னர் சாம் சண்டைப்பயிற்சியாளராக பணிபுரியும் இந்த படத்துக்கு அசார் நடனம் அமைக்க, யுகபாரதி, A.PA.ராஜா, வைசாக் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். வரும் 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட படக்குழுவினரால் திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்பு - சதீஷ் - சிவா (AIM).

Also Read | “இவன மாதிரி ஆளுகளோட இந்த வீட்ல இருக்க வெறுப்பா இருக்கு”.. ஏடிகே பரபரப்பு பேச்சு..! Bigg Boss 6 Tamil

Romeo Pictures Raj Mohan Debut venture Baba Black Sheep

People looking for online information on Baba Black Sheep, Romeo Pictures will find this news story useful.