கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals விருது வழங்கும் விழா வெற்றிகரமாக நிகழ்ந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) வழங்கு விழாக்களும் ஏகோபித்த நன்மதிப்பை பெற்றன.
இந்நிலையில் செலிபிரிட்டி ரியாலிட்டி டான்ஸ் போட்டி நிகழ்வான Behindwoods Celebrity Star Dancer நிகழ்வு டிஜிட்டல் ஹிஸ்டரியில் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைக்கும் பிரபல டான்ஸ் மாஸ்டரான கலா மாஸ்டர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்வு மூலம் பிரபலமான திரைத்துறையில் முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைக்கும் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஆகியோர் நடுவர்களாக பங்குபெற்றுள்ளனர்.
பிஹைண்ட்வுட்ஸ் வீஜே நிக்கி, கலக்கப்போவது யாரு குரேஷி மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அஷ்வின், ரித்திகா, சுனிதா, தீபா அக்கா, KPY பாலா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பங்குபெற்றனர்.
இவர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை ஓவியா, ஜூலி மற்றும் நடிகர் ரியோ உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, அஷ்வினுக்கு ஒவ்வொரு எமோஷனுக்குமான மதிப்பெண்கள் வழங்கப்பட சொல்லப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் 10 மதிப்பெண்கள் என குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த போர்டில் ரொமான்ஸூம் இடம் பெற்றது.
அப்போது இதுகுறித்து பேசிய அஷ்வின் குமார், “நான் சொல்லியே ஆக வேண்டும். எமோஷனலாக என்னால் நடிக்க முடியும். எனக்கு ரொமான்ஸ் வரவே வராது. என்னை ரொமான்ஸ் காட்சிகள் நடிக்க வைப்பதெல்லாம் இயக்குநர்களின் எண்ணம் தன். அதைதான் நான் பிரதிபலிக்கிறேன். தவிர, நான் அதில் நான் ரொம்ப கடுப்பாகிவிடுவேன்.
ரொமான்ஸ் காட்சிகள் நடிப்பதென்றாலே எனக்கு கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். இயக்குநர் முன்னால் சென்று நின்று என்ன பண்ண வேண்டும், ஏது பண்ண வேண்டும் என்று கேட்டு அதன்படிதான் நடிப்பேன், அவ்வளவுதான். அது ரொமான்ஸ் வந்தாலும், அதில் 10 மார்க் வந்தாலும் wife-இடம் மட்டும்தான் போகும்!” என்று கூறினார். நடிகர் அஷ்வின் தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.