Rolls Royce tax: கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்திருந்தார்.
விஜய் காருக்கான நுழைவு வரி
அந்த காருக்கு அப்போதே இறக்குமதி வரி செலுத்தப்பட்டிருந்தாக கூறப்பட்ட நிலையில், அந்த நேரத்தில் இந்த காரை பதிவு செய்ய தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, அந்த வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
Also Read: ஹன்சிகாவின் 50வது படம்.. கௌரவ தோற்றத்தில் சிம்பு? ரிலீஸ் விஷயத்தில் பரபரப்பு அப்டேட்..!
விஜய் தொடர்ந்த மனு
ஆனால் மார்க்கெட் நிலவரப்படி குறிப்பிட்ட இந்த காரின் விலை 2012-ல் 2.25 கோடி ரூபாய். எனினும் இறக்குமதி வரி, சாலை வரி மற்றும் நுழைவு வரி உள்ளிட்டவை அனைத்தும் மொத்தமாக சேர்த்து காரின் விலையை விட அதிகமாக இருந்தது. இதனால் இந்த நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அதே ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் ஒரு கோரிக்கை வழக்கை தொடர்ந்தார்.
தனி நீதிபதி போட்ட அபராதம்
அந்நேரத்தில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், விஜய் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் நடிகர் விஜய் வரிவிலக்கு கேட்டதற்காக அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தார். அத்துடன், நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் ஒரு கருத்தயும் முன்வைத்திருந்தார்.
தனி நீதிபதியின் எதிர்மறை கருத்து
அதில், நடிகர்கள் சமூகத்துக்காக பேசுவதாக கூறும்போது அவர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது என்றும், வரி என்பது நன்கொடை அல்ல, அது நாட்டு மக்களின் கட்டாய பங்களிப்பு என்றும் தெரிவித்திருந்தார். குறிப்பாக சினிமாவில் மட்டும் (ரீல்) ஹீரோவாக இருப்பவர்கள் ரியல் ஹீரோவாகவும் திகழ்ந்து முன்னுதாரணமாக காட்சியளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் விஜய்யின் மேல் முறையீடு
இதனை அடுத்து, தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு மீண்டும் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு முதலில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரியை ஒரு செலுத்தஜூலை மாத இறுதியில் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. எனினும் விஜய்யின் இந்த கார் விவகாரத்தில் தனி நீதிபதி கூறிய எதிர்மறைக் கருத்துகளை நீக்கும்படி நடிகர் விஜய் தரப்பில் கோரப்பட்டது.
வரி முன்பே கட்டப்பட்டுவிட்டது.. தனி நீதிபதி கருத்தை நீக்கவேண்டும்
அதன்படி இந்த வழக்கில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டதாக கூறப்படும் வாதத்தில், “குறிப்பிட்ட இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் விசாரணையை தாண்டி நடிகர் விஜய் குறித்த குறிப்பிட்ட அந்த கருத்து தேவையற்றது என்றும், அந்தக் காருக்கு கட்ட வேண்டிய வரி, ஆகஸ்ட் மாத்மே செலுத்தப்பட்டு விட்டது” என்று விஜய் விளக்கப்பட்டது.
தனி நீதிபதியின் கருத்துக்கள் நீக்கம்
இந்நிலையில் தான் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சஃபீக் அமர்வு, விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்களை நீக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.