சன். டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுள் மிக முக்கியமான சீரியல் ரோஜா. சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த சீரியலில் அனு என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஷாமிலி சுகுமார் .
இவர்தான் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறி இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து அவரே தம்முடைய விளக்கத்தை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம்! முதலில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கொரோனா குறைய வேண்டி இருக்கிறது. ஆக இந்தியாவே தொறறால் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோசமான சூழலில் இருந்து சென்னை மீளவேண்டும். உள் தமிழகம் மீள வேண்டும். நான் ஒரு 26 சீரியல்களில் நடித்து முடித்து இருந்தேன். அந்த நேரத்தில் ஒரு வாய்ப்பாக வந்ததுதான் ரோஜா. அந்த சீரியலில் என்னுடன் நடித்தவர்கள் என்னுடைய தயாரிப்பு நிறுவனமான சரிகம தயாரிப்பு நிறுவனம், சன் டிவி தரப்பு என அனைவருமே ஜாலியாக ஈகோ பார்க்காமல் பணிபுரிவதற்கு உதவினர்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு சீரியல் செட்டாக அது இருந்தது. அதனால்தான் 2019 ஆம் வருடம் ரோஜா சீரியலில் நான் நடித்த அனு கேரக்டர் எனக்கு பெஸ்ட் வில்லி விருது வாங்கி தந்தது. ஆனால் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறேன். என்னுடைய உடல் ஒத்துழைப்பதில்லை. ஆகையால் நான் இந்த கொரோனா நேரத்தில் ஷூட்டிங் போவதை தவிர்க்க வேண்டி இருக்கிறது. இந்த கொரோனா எனக்கு தெரிந்த நிறைய பெரிய பாதித்துவிட்டது.
இந்த நேரத்தில் பாதுகாப்பு முக்கியமாக இருக்கிறது. இந்த நிலைமையால் தான் என்னால் சீரியலில் நடிக்க முடியவில்லை. இந்த நிலைமை சரி ஆனால் கண்டிப்பாக சீரியலில் நடிப்பேன். பலர் நீங்களே நான் சீரியலில் நடிக்காததற்கு நான் கர்ப்பமாக இருப்பதும் இந்த கொரோனா சூழலும் தான் காரணம் என்று யூகித்து அக்கறையுடன் மெசேஜ் செய்திருக்கிறீர்கள். நிச்சயமாக மீண்டும் நான் சீரியலில் வருவேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்.
ரோஜா சீரியலை பொரத்தவரை எனக்கு மாற்றாக நடிக்க வைக்கப் போகும் அனு கதாபாத்திரம் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அனு கதாபாத்திரம் ஒரு திட்டு வாங்க கூடிய கதாபாத்திரம். எனவே என்னை திட்டுவது போல அவர்களை திட்டாதீர்கள். நான் கல் மனது தாங்கிக் கொண்டேன்.அவர்கள் புதியவர்கள் உங்களுடைய ஆதரவை தாருங்கள். அதெல்லாம் வெறும் நடிப்புதான்.
உண்மையில் நான் கொரோனாவால் பயந்து விட்டேன். அதனால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டி இருக்கிறது. மருத்துவர்களும் இந்த நேரத்தில் இப்படியான சூழ்நிலையில் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்துகின்றனர். எனவே ரசிகர்களாகிய நீங்களும் மாஸ்க் போடுங்கள் விழிப்புடன் இருங்கள். மற்றபடி ரோஜா சீரியல் இப்போதைக்கு முடியாது. என் போர்ஷனும் முடியாது. என் கதாப்பாத்திரம் அந்த சீரியலில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். உங்களுடைய முழு ஒத்துழைப்புடன் ரோஜாசீரியல் நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது. 2000, 3000, 5000 எபிசோடுகள் கடந்தும் ரோஜா சீரியல் உங்கள் உறுதுணையுடன் ஒளிரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மேலும் சில சீரியகளில் முதன்மை கதாபாத்திரங்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர். இவை யாவும் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் உண்டுபண்ணினாலும் நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழல் என்பதை புரிந்துகொண்டு அவர்களின் எதிர்காலத்துக்காக வாழ்த்தி வருகின்றனர்.
ALSO READ: இவரே விலகுறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்! அடுத்தடுத்து நீங்கும் பிரபல சீரியல் கேரக்டர்கள்!