ROJA SERIAL : "இது முடிவல்ல..".. கடைசி நாள் படப்பிடிப்பு.. ரோஜா சீரியலின் ஹீரோ & ஹீரோயின் உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரோஜா சீரியலில் அர்ஜூன் என்ற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிபு சூர்யன், சீரியல் முடிவடைவது குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | மாணவர்களுடன் கபடி & கிரிக்கெட் ஆடி மாஸ் காட்டும் அமைச்சர் ரோஜா.. TRENDING

டிவி சீரியல்களில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு அன்று முதல் இன்றுவரை தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் உள்ளது. கிராமப்புறம் தொடங்கி நகரங்கள் வரை சன் டிவி சீரியல்கள் பல, மக்களை கவரும்படியாகவும், தொடர்ச்சியாக அவர்கள் பார்க்கக் கூடிய வகையிலுமே அமைந்து வருகின்றன.

அந்த வகையில் சன் டி.வி.யில் பலருக்கும் விருப்பமான சீரியல்களுள் ஒன்றாக ‘ரோஜா’ சீரியல் திகழத் தொடங்கியது. நினைவில் வைத்துக்கொள்ளும் வகையிலான கேட்சியான டைட்டிலுடன் ஒளிபரப்பான இந்த சீரியல் ஒரு குடும்ப டிராமாவாக இருந்தாலும் அவ்வபோது திரைப்படங்கள் போலவே, ட்விட்ஸ்ட்டுகள், விறுவிறுப்பும் இதில் இடம்பெறும். குறிப்பாக திரைப்படங்களை போலவே ஹாரர், த்ரில்லர், க்ரைம், குடும்ப செண்டிமெண்ட், ரொமாண்டிக் காமெடி என பல ஜானர்களிலும் இந்த சீரியல் நகர்துகொண்டே இருந்தது.

ஃபேஸ் ஆஃப் படங்களில் வருவது போல முகம் மாற்றி மாறுவேடம் பூணும் டெக்னிக் உட்பட பல புதிய தொழில்நுட்பங்களையும் கையாண்ட இந்த சீரியலில் நாயகன் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யனும், ரோஜாவாக பிரியங்கா நல்காரும், வில்லி அனு கதாபாத்திரத்தில் விஜே அக்ஷயாவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பழம்பெறும் நடிகர்கள் வடிவுக்கரசி, ராஜேஷ் உள்ளிட்டோரும் நடிக்க,  மெட்டி ஒலி புகழ் காயத்ரி அர்ஜுனின் அம்மாவாகவும், அர்ஜுன் அப்பாவாக பிரபல 80ஸ் ஹீரோ சிவா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படி சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக சன் டிவியில் ஒளிபரப்பாகி, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை இந்தத் தொடர் தற்போது நிறைவடைவது குறித்து நாயகர்கள் சிபுவும், பிரியங்காவும் தத்தம் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

அதில், சீரியலின் ஹீரோ, நடிகர் சிபு சூர்யன்,  “சுமார் 4 வருடங்களுக்கு மேலான அழகான இந்த பயணத்தில் அதிக அன்பைப் பெற்றிருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து `அர்ஜூன்' கேரக்டருக்கு  என்னைத் தேர்வு செய்த சன் டிவிக்கும், சரிகமவிற்கும் நன்றி. ரசிகர்கள் அனைவருக்கும் அன்பும், அரவணைப்பும்! தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். விரைவில் சீக்கிரம் சந்திப்போம்!”என கூறியுள்ளார்.

இதேபோல் சீரியலின் நாயகி நடிகை பிரியங்கா, “என் வாழ்வில் இந்த 4 + வருஷ பயணத்தை மறக்கமுடியாது.. தமிழ்ல ஒரு வார்த்தைகூட தெரியாம இங்க வந்த என்னை நீங்க உங்க வீட்டு பொண்ணா ஏத்துக்கிட்டீங்க .. இந்த 4 + ஆண்டுகளில் நிறைய நிறைய அன்பை கொடுத்தீங்க.. உங்க அன்புக்கு நான் என்ன செய்யப் போறேன்..  தெரியல.. ஆனா, நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்! ரோஜாவாக மட்டுமில்லாமல் உங்கள் இதயத்திலும் இடம் கிடைக்க வாய்ப்பளித்த சரிகமவிற்கும், சன் டிவிக்கும் என் நன்றிகள்!  நிறைய நல்ல நினைவுகளுடன், நிறைய நல்ல உள்ளங்களின் அன்பு மற்றும் ஆசிர்வாதத்துடன் ரோஜாவிலிருந்து விடைபெறுகிறேன்.. இது முடிவில்லை! இன்னொரு புதிய ஆரம்பத்துடன் விரைவில் சந்திக்கிறேன்.. என்றும் அன்புடன், பிரியங்கா!” என தெரிவித்துள்ளார்.

Also Read | ஜெயிலர் ஷூட்டிங்கில் குடும்பத்துடன் ரஜினிகாந்தை சந்தித்த ROBO ஷங்கர்! பிண்ணனி தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Roja serial actor sibbu and actress priyanka emotional post

People looking for online information on Priyanka, Roja Serial, Sibbu, Sun TV will find this news story useful.