பாரதியாக ‘அர்ஜூன் சார்’..! வேறொரு புதிய சீரியலில் நாயகியான ‘ரோஜா’ ஹீரோயின்.! விபரம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலின் இறுதி அத்தியாயங்கள் அண்மையில் நடந்து முடிந்ததை அடுத்து, முதல் சீசன் முடிவு பெற்றது.

Advertising
>
Advertising

Also Read | தேதி மாற்றப்பட்ட ஷங்கர் - ராம்சரண் இணையும் RC15 படத்தின் Song ஷூட்..? இதுதான் காரணமா?

இந்நிலையில் இந்த சீரியலின் 2வது சீசனில் கண்ணம்மாவாக, கடைசியாக நடித்து வந்த வினுஷாவும், பாரதியாக இம்முறை ரோஜா சீரியல் ஹீரோவான சிபு சூர்யனும் நடிக்கின்றனர். முதல் சீசனில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை பாரதி கண்ணம்மா சீரியலின் 2வது சீசன் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், சன் டிவியில் சிபு சூர்யனுடன் ரோஜா சீரியலில் இணைந்து நடித்தவர் நடிகை. அர்ஜூனாக சிபு சூர்யனும், ரோஜாவாக பிரியங்கா நல்காரியும் நடித்த ரோஜா சீரியலில், “அர்ஜூன் சார்” என அழைக்கும் விஷயம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

இந்நிலையில் இவர் ஜீ தமிழில் சீதா ராமன் எனும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சீரியல் கதைப்படி அக்காவுக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், தங்கையும் நாயகியுமான பெண்ணுக்கு திருமணம் எப்படியோ நடந்துவிடுகிறது.

ஆனால் நாயகி அழகில்லை என்பதை காரணம் காட்டி நாயகன் வீட்டில் நாயகனின் அம்மா ஏற்க மறுக்கிறார்.

அழகு என்பது மனதில் இருக்கிறது என்பதை நாயகி நிரூபித்து கணவரின் குடும்பத்தினருடன் இணைவாரா? என்பதை நோக்கி இந்த சீரியல் கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிகிறது.

Also Read | பிப்.6 முதல் பாரதி கண்ணம்மா 2.. அதே கதையா? புதிய கதையா? கலர்ஃபுல் ப்ரோமோ.. Bharathi Kannamma 2

தொடர்புடைய இணைப்புகள்

Roja actress Priyanka Nalkari Seetha Raman Serial Zee Tamil

People looking for online information on Priyanka Nalkari, Sibbu Suryan, Zee Tamil will find this news story useful.