பல களேபரங்களுக்கு பிறகு வெண்பாவை திருமணம் செய்த ரோகித்.. பரபரப்பில் பாரதி கண்ணம்மா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Advertising
>
Advertising

பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்ட தான் செய்தது.

சில எபிசோட்களுக்கு முன்பு வெண்பா, புதிய திட்டம் ஒன்றை தீட்டி தன் வயிற்றில் வளரும் குழந்தையை பாரதியின் குழந்தை என நம்ப வைத்து, குழந்தை வளர்ந்த பிறகு பாரதியை திருமணம் செய்ய புதிய திட்டத்தை வெண்பா தீட்டுகிறார்.

அதன்படி பாரதியை சந்தித்து வயிற்றில் வளரும் குழந்தைக்காக தன் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என அழுது வெண்பா கெஞ்சுகிறார். "ஊர் அறிய திருமணம் செய்யாமல் ஊருக்கு வெளியே ரகசியமாக கோயிலில் திருமணம் செய்தால் போதும்" என கூறுகிறார். பாரதியை மிரட்ட தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். வெண்பாவை மீட்டு பாரதி மருத்துவமனையில் சேர்க்கிறார். திருமண செய்து கொள்ள வாக்கு கொடுக்கிறார்.

பாரதியிடம் தன்னை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தி வந்த வெண்பாவுக்கு ரோஹித்துடன் அவசர அவசரமாக அவரது அம்மாவால் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த திருமணத்தில் இருந்து தப்பித்து வந்த வெண்பா பாரதியை கூட்டிக்கொண்டு திருமணம் செய்வதற்காக கோவிலுக்கு சென்று விட்டார். இதை விருப்பம் இல்லாமல் தயக்கத்துடன் தவிர்த்து வந்த பாரதி, டிஎன்ஏ ரிசல்ட் அதற்குள் வந்து விட்டால் வெண்பா கழுத்தில் தாலி கட்ட வேண்டிய அவசியமில்லை என்று யோசித்தார்.

ஆனாலும் டிஎன்ஏ டெஸ்ட் வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மருத்துவமனை லேப் டெக்னீசியன் கூறிவிட்டநிலையில், பாரதி வேறு வழியின்றி வெண்பாவிடம் சிக்கினார். அவரை தன் கழுத்தில் தாலி கட்டும் கட்டாய சூழ்நிலைக்கு வெண்பா அழைத்து சென்றுவிட, எனினும் விருப்பமின்றி நின்றுகொண்டிருந்த பாரதி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோதுதான் அங்கு கண்ணம்மா ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு வந்து திருமணத்தை தடுத்துவிட்டார்.

இந்நிலையில் ரோஹித் வெண்பாவுக்கு தாலி கட்டி திருமணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. வெண்பாவின் அம்மா வெண்பாவை திட்டி இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைக்கிறார். ஐயர் மந்திரம் ஓத வெண்பா கழுத்தில் ரோஹித் தாலி கட்டுகிறார். ரோஹித் சாரதி வெண்பா ஜோடி சேர்நதாச்சு என ரோஹித் பேசுவது போல வீடியோ நிறைவடைகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Rohit Venba Marriage Barathi Kannamma Today Episode

People looking for online information on Barathi Kannamma, Barathi Kannamma today episode, Star vijay will find this news story useful.