அட்ரா மேளத்தை!.. ரிசார்ட்டில் கோலாகலமாக நடந்த ஷங்கர் மகளின் திருமணம்! VIRAL ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் ரோஹித் தாமோதரன் எனும் கிரிக்கெட் பிரபலத்துக்குமான திருமணம் இன்று நடைபெற்றதை அடுத்து இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர். இவருக்கு பிரபல புதுச்சேரி கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரன் என்பவருடன் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே திருமணம் நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன், மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் சரியாக காலை 11.15க்கு மணமகன் ரோஹித், மணமகள் ஐஸ்வர்யா கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

கொரோனா என்ற இந்த பெருந்தொற்று படிப்படியாக குறைந்து அன்றாட வாழ்வு நிலை திரும்பியவுடன் முக்கிய பிரமுகர்கள், திரையுலகத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து சிறப்பான முறையில் இவர்களுக்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சி (Wedding Reception) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அட்ரா மேளத்தை!.. ரிசார்ட்டில் கோலாகலமாக நடந்த ஷங்கர் மகளின் திருமணம்! VIRAL ஃபோட்டோஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rohit Damodharan weds Aishwarya Shankar Daughter of Shankar

People looking for online information on Aishwarya Shankar, Shankar will find this news story useful.