"பீஸ்ட் .. 2வது தடவ பாக்குற FANS சந்தோஷப் படுறாங்க.." - சென்னையின் பிரபல தியேட்டர் ஓனர் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து ஏப்ரல் 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

Advertising
>
Advertising

Also Read | KGF CHAPTER 2 க்கு ஏன் டிக்கெட் கிடைக்க மாட்டேங்குது..? தியேட்டர் ஓனர் சொன்ன சூப்பர் தகவல்

பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டது.   இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாண்டார். கிரண் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.



பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம், விஜய் படங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பீஸ்ட் படம் ரசிகர்களிடம் கனிசமான வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று ஓடி வருகிறது. நமது Behindwoods சேனலுக்கு சென்னை ரோகினி தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான ரெவன்ந்த் அளித்த பேட்டியில் சில தகவல்களை கூறியுள்ளார். அதில் "பீஸ்ட் படம் 70% விமர்சனம் நல்ல முறையில் வந்ததாகவும், முதல் ஷோவில் ரசிகர்கள் எதிர்பார்த்த விடயங்கள் படத்தில் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததாகவும், பின் அடுத்தடுத்த காட்சிகளை பார்க்கும் போது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும்" குறிப்பிட்டுள்ளார்.

Also Read | விஜய் நடிக்கும் தளபதி 66.. வேற லெவல் புகைப்படத்துடன் LATEST சர்ப்ரைஸ் அப்டேட்

"பீஸ்ட் .. 2வது தடவ பாக்குற FANS சந்தோஷப் படுறாங்க.." - சென்னையின் பிரபல தியேட்டர் ஓனர் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rohini Theatre Owner about Vijay Starring Beast Movie

People looking for online information on Beast, Nelson Dilipkumar, Rohini Theatre Owner, Vijay will find this news story useful.