தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடுகட்ட முடியாத மிகப்பெரிய இழப்பாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த விவேக் சினிமா மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சினிமாவில் நுழைந்தார். தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். அவரது இழப்பு காரணமாக நடிகர், நடிகைகளும், பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவிக்க அவரது வீட்டை அடைந்துள்ளனர்.

தனது காமெடிகளால் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த பெருமை அவருக்கு சேரும். எனவே தான் அவர் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார். மேலும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசின் மாநில விருது, எடிசன் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் புகழ்பெற்ற நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு உரிய மரியாதையுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்ய இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகர்கள் கொட்டாச்சி மற்றும் ரோபோ சங்கர் அவரது உடலை பார்த்து கதறி அழுத காட்சிகள் பார்ப்பவர்களின் மனதை உடைக்கும் வண்ணம் இருந்தது.