''எனக்கு அந்த வலி தெரியும்'' - தங்க மங்கைக்கு பரிசு அறிவித்த பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 70 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்று தேசத்துக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

இதற்காக கோமதி மாரிமுத்துவிற்கு பல்வேறு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களும் தங்களது  வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் ரோபோ ஷங்கர், கோமதி மாரிமுத்துவிற்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''ஆசிய  தடகளப் போட்டியில் அற்புதமாக தனது திறமையை வெளிக்காட்டிய அன்பு சகோதரி கோமதி மாரிமுத்துவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.  அவர்களுக்கு எனது சின்ன அன்பு பரிசாக ரூ. 1 லட்சம் பரிசு வழங்குவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இதற்கு முன்பு ராணுவ வீரர்கள் இறந்த பொழுது நான் உதவி செய்தேன். 

ஆனால் இந்த முறை நான் மிகவும் பெருமையாக செய்கிறேன். ஒரு இந்தியனாக, தமிழனாக , தன் தந்தை, பயிற்சியாளர் இறந்தும், உடல் குறைவால் பாதிக்கப்பட்டும் தனது விடா முயற்சியால் வெற்றி பெற்ற தங்க மங்கை கோமதி சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.  நானும் கஷ்டப்பட்டு, யாருடைய ஆதரவும் இன்றி முன்னேறிய குடும்பத்தை சேர்ந்தவன் தான்.  அதனால் அந்த வலி என்னவென்று எனக்கு தெரியும்'' என்று தெரிவித்துள்ளார்.

Robo Shankar gives prize to Gomathi Marimuthu Who win Gold In Asian Athletics Championship

People looking for online information on Asian Athletics Championship, Gold Medal, Gomathi Marimuthu, Robo shankar will find this news story useful.