ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Also Read | "சரி விடு.. அப்டி இருக்கனும்னு தோனுச்சுனா சீக்கிரம் வெளில வா" - கதறியழுத நிவாஷினி.. தேற்றிய அசல்
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் சீரியல் நடிகை ரச்சிதா சமைத்துக் கொண்டு இருந்தபோது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், சென்று உணவு கேட்க, அப்போது ரச்சிதா, உங்களுக்கு பசிக்கிறது என்றால் கஞ்சி குடியுங்கள் என்று சொல்ல, உடனே ராபர்ட் மாஸ்டர் தனக்கு கஞ்சிதான் போல என நினைத்து கோவித்துக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் அவரை அழைத்துவந்த ஷெரினா கிச்சனில் இருந்து சிவின் மற்றும் ரச்சிதா முன்னிலையில், வைத்து விசாரிக்கும் போது முழு உண்மையும் தெரியவந்தது.
பின்னர் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவை சாப்பிட சொல்ல, ரச்சிதா மாட்டேன் என்பதாக தலையை ஆட்டுகிறார். அப்போது ஷெரினா, முதலில் நீங்கள் சாப்பிடுங்க மாஸ்டர், ஸ்கூல் பையன் மாதிரி அடம் பிடிக்காதீங்க என்று கூறினார். இதேபோல், சிவினும், ரச்சிதா எந்த உள்நோக்கமும் இன்றி சாதாரணமாகவே கஞ்சி சாப்பிட சொன்னார் என கூறி ராபர்ட்டை சமாதான படுத்தினார். இவர்களின் சண்டையையும் அதை பிற ஹவுஸ்மேட்ஸ் சமாதானம் செய்துவைத்ததும் க்யூட்டாக இருந்ததாக ட்விட்டரில் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | "எல்லாம் ரிலாக்ஸ் ஆனதும் ஆயிஷாக்கு மூச்சுத்திணறல் வருது! எப்படி?" - ஜனனி, ராபர்ட் பேசியது என்ன?