தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டி முடிவடைய இன்னும் சில நாட்களே இருப்பதாக சொல்லப்படும் நிலையில் பிக்பாஸ் வீடு பல வேடிக்கையான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவங்களால் நிறைந்து கொண்டிருக்கிறது.
Also Read | "அந்த விஷயத்துல வெற்றி கிடைக்கல. அதுதான் உண்மை"... மவுனம் கலைத்த விக்ரமன்..BiggBoss
டைட்டிலை வெல்லப்போவது யார்? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்தார் கதிர். 3 லட்ச ரூபாயுடன் அவர் வெளியேற, தற்போது பணப்பெட்டி வீட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. பணப்பெட்டியை யாராவது எடுப்பார்களா? அல்லது தொடர்வார்களா? என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக பைனலிஸ்ட் போட்டியாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை கேட்டுப் பெறலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். அதற்கென வீட்டினுள் காது போன்ற அமைப்பு வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே சென்று போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவுகளை பட்டியலிடலாம்.
அப்போது விக்ரமன் தனக்கு பீஃப் பிரியாணி, பீஃப் ஃப்ரை, பிரெட் அல்வா, ரைத்தா, கத்தரிக்கா கொத்து ஆகியவை வேண்டும் என கேட்டிருந்தார். இதனிடையே இந்த உணவுகள் அவருக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக விக்ரமன் சக போட்டியாளர்களுடம் பேசும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகியது.
இந்த சூழ்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் கார்டன் பகுதியில் விக்ரமன் அமர்ந்திருக்கிறார். அப்போது, உணவுகள் ஆர்டர் பெறுவதுபோல ராபர்ட் மாஸ்டர் நடிக்கிறார். விக்ரமனிடம் நடந்து வரும் மாஸ்டர், "உங்க ஆர்டர் என்ன?" என கேட்கிறார். அப்போது விக்ரமன்"பீஃப் பிரியாணி" என்கிறார். அதனை கேட்டதும், "என்னது பீஃப் பிரியாணியா?" என கேட்கிறார் ராபர்ட். விக்ரமன் ஆமாம் என்று சொன்னதும் "பாதி பிளேட் கொடுக்கப்பட்டுமா? அல்லது ஒரு பிளேட்டா?" என கேட்க, தனக்கு முழு பிளேட் வேண்டும் என்கிறார் விக்ரமன்.
தொடர்ந்து, தனக்கு இறால் வேண்டும் எனவும் விக்ரமன் கேட்கிறார். ராபர்ட் "சரி, ஒரு மணி நேரத்தில் வந்துவிடும்" என்றபடி அங்கிருந்து செல்கிறார். அதனைக்கண்டு விக்ரமன் புன்னகைக்கிறார்.
Also Read | முதன்முறையாக தனது குடும்பம் பத்தி உருக்கமாக பேசிய விக்ரமன்.. எமோஷனல் ஆன போட்டியாளர்கள்..!