பட்டப்பகலில் பிரபல நடன இயக்குநர் வீட்டில் நடந்த திருட்டு - வெளியான சிசிடிவி காட்சிகள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மம்முட்டியுடன் 'அழகன்' படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ராபர்ட். தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள அவர் தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக விளங்குகிறார்.

தளபதி விஜய், தல அஜித், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடனம் ஆடும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தனது வீட்டின் முன்புறம் இருக்கும் சிசிடிவி காட்சிகள் உள்ள அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் அவரது வீட்டின் கதவை திறந்து சைக்கிளை திருடி செல்வது பதிவாகியுள்ளது. பட்டப்பகலில் நடந்துள்ள சம்பவம் குறித்து நடிகர்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Tags : Robert

Robert master shares cycle theft cctv footage that goes viral | தனது வீட்டில் திருட்டு நடந்த சிசிடிவி வீடியோவை பகிர்ந்த ராபர்ட் மாஸ�

People looking for online information on Robert will find this news story useful.