“கையில் மிதக்கும் கனவா நீ”.. அலேகா தூக்கிய ராபர்ட் .. “அந்த காலம் அது டிடி காலம்”.. அமுது கலாய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | வந்தவங்களால ஹவுஸ்மேட்ஸ் குழம்பிட்டாங்க.. “நீங்க வந்ததும்”.. டிடிக்கு நன்றி சொன்ன பிக்பாஸ்.!

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ADK வெளியேறினார். இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக வந்த விஜய் டிவி டிடி ஒவ்வொரு போட்டியாளர் குறித்தும் தம்முடைய பார்வையை பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக அனைவரையும் பார்த்து முடித்துவிட்டு டிடி பிக்பாஸ்  வீட்டை விட்டு முன்பு பேசிய பிக்பாஸ், “டிடி.. சமீபத்துல பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்து ஹவுஸ்மேட்ஸை பார்த்து பேசிட்டு போனவங்க எல்லாம் போகும்போது ஹவுஸ்மேட்ஸ் முகத்தில் குழப்பம் தெரிந்தது, இப்போ அனைவர் முகத்திலும் புன்னகை தெரியுது.” என குறிப்பிட்டு பாராட்டினார். டிடியும் நெகிழ்ந்தார். இதேபோல், விஜே மகஸ்வரி டிடியிடம் பேசும்போது, “ஒவ்வொருவர் பற்றியும் சும்மா சொல்ல வேண்டும் என சொல்லாமல், ஒவ்வொருவரையும் உண்மையில் கவனித்து சொல்லி இருக்கிறீர்கள், அதற்கு நன்றி” என தெரிவித்தார்.

பின்னர் கையில் மிதக்கும் கனவா நீ பாடலை போட்டதுமே ராபர்ட் மாஸ்டர் டிடியை அலேகாக தூக்கிக் கொண்டுவிட்டார். ரொமட்டாய்டு நோய்க்குறியால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட டிடி பல வேளைகளில் வீல் சேரில் நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்தார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் வரும்போது ஹேண்ட் ஸ்டிக்குகளுடன் வந்தார். இந்நிலையில் தான், அவருக்கு உதவியாக ராபர்ட் மாஸ்டர் டிடியை அலேகாக தூக்கொக் கொண்டு சென்றார். அப்போது அமுதவாணன், “அந்த காலம்.. அது. அது.. அது டிடியின் காலம்.. இந்த காலம் அதுவும் நம் டிடியின் காலம்” என விளையாட்டாக பாட்டு பாடி, டிடி 90களில் இருந்தே ரசிகர்களின் பிடித்தமான மற்றும் புகழ்பெற்ற தொகுப்பாளினியாக இருப்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

Also Read | “வார இறுதியில் வறுத்தெடுக்குறாங்க.. சரியா இருக்குறதா நெனைக்குறீங்களா?” - அசிமிடம் பிரியங்கா

தொடர்புடைய இணைப்புகள்

Robert master lifts Dhivya Dharshini aka DD bigg boss

People looking for online information on Bigg boss, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, DD, Dhivya Dharshini will find this news story useful.