தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம், ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் புது புது டாஸ்க்குகள் தான்.
இதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் அதிக ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.
அதே வேளையில், டாஸ்க்கின் பெயரில் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க சண்டைகள் மற்றும் சச்சரவுகளும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது.
பொம்மை டாஸ்க் தொடங்கி கடந்த வாரம் நடந்து முடிந்த நீதிமன்ற டாஸ்க் வரை போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்ட நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். மற்ற நேரங்களில் ஒற்றுமையாக இருந்தால் கூட, டாஸ்க் என வந்து விட்டால் பிக்பாஸ் வீட்டிற்குள் நிச்சயம் பஞ்சாயத்து தான். கடந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் முடிவடைந்திருந்த சூழ்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க்காக பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க்கும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து விலகியுள்ள ராபர்ட் மாஸ்டர், Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பிக்பாஸ் வீட்டில் நடந்த ஏராளமான விஷயங்கள் குறித்தும் பேசி உள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் குரூப் குரூப்பாக பிரிந்து செயல்படுவது குறித்தும், Groupism என்ற வார்த்தை பிக்பாஸ் வீட்டில் பரவலாக இருந்து வருவது பற்றியும் நெறியாளர் ராபர்ட் மாஸ்டரிடம் கேட்டார். அதே போல, தனியாக விளையாடுவது யார் என்பது பற்றியும் நெறியாளர் கேட்க, இதற்கு பதிலளித்த ராபர்ட் மாஸ்டர், "மூக்குத்தி (ரச்சிதா), அப்புறமா தனலட்சுமி. என்ன தான் நடந்தாலும் அவள் எடுக்குறது தான் முடிவு. ஷிவின், டாக்டர் (ராம்) உள்ளிட்டோரும் தனியாக ஆடுகிறார்கள்.
அசீம் எல்லாம் உஷாரா டீம சேர்த்துடுவாரு. நம்மளுக்கே தெரியும், உங்களுக்கு தெரியுமா என்னன்னு தெரியல. அங்க அப்படியே தெரியும், தனியா கூட்டிட்டு போயிருவாரு. அங்க ஒரு Zone இருக்கும்ல, அங்க கூட்டிட்டு போய் தான் பேசுவாரு. எல்லாத்துக்கும் ஆரம்பம் அவரு தான்.
இப்ப கமல் சாருகிட்ட கம்ப்ளைண்ட் பண்றாரு, 'இவங்க எல்லாம் குரூப் சார், நான் தனியா தான் ஆட வந்திருக்கேன்' அப்படின்னு. பொம்மை டாஸ்க்ல எல்லாம் நீ தனியா ஆடி இருக்கலாமே. நீ அசல வச்சிக்கிட்டு, அப்புறமா ADKவ வச்சுக்கிட்டு ஆடுறது. அந்த டாஸ்க்ல நீங்க திரும்ப Rewind பண்ணி பாருங்க, அவரு ஜாலியா உட்கார்ந்து இருப்பார். நாங்க எல்லாம் எப்படா ஓடணும்ன்னு இருப்போம். அப்படி நீ தைரியமா உட்காருறன்னா உனக்கு நீ ஆள் ரெடி பண்ணி வச்சுட்டு தானே அர்த்தம்" என அசீம் பற்றி ராபர்ட் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.