"சாப்பாடு மாதிரி ஷிவின் மூஞ்சும்..".. ராபர்ட் வார்த்தையால் உருவான சர்ச்சை!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6 வது சீசன் ஒவ்வொரு நாளும் பல்வேறு திருப்புமுனைகளுடன் தான் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | விஷால் நடிக்கும் 'லத்தி'.. முக்கியமான பண்டிகையை நாளில் ரிலீஸ்! செம்ம அப்டேட்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், ஏகப்பட்ட சண்டைகள் மற்றும் அதே வேளையில் கலகலப்பான விஷயங்கள் கூட அவ்வப்போதும் அரங்கேறி வருகிறது.

இதற்கு மத்தியில், டாஸ்க் என வந்து விட்டால் நிச்சயம் போட்டியாளர்கள் மத்தியில் மாறி மாறி களேபரங்கள் தான் நடைபெறும்.

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க் உள்ளிட்ட இரண்டு டாஸ்க்குகள் காரணமாக கடந்த சில எபிசோடுகளில் பல போட்டியாளர்கள் மத்தியில் சண்டை வெடித்திருந்தது. இதன் காரணமாக உருவான பல பிரச்சனைகளுக்கு வார இறுதியில் வந்த கமல்ஹாசன் விடை அளித்திருந்தார். இதற்கு மத்தியில், ஜிபி முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என அங்கிருந்து இரண்டாவது வாரம் கிளம்பி விட்டார்.

இதற்கடுத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரியும் உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தனர். தொடர்ந்து, தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் மீண்டும் தங்களின் ஸ்டைலில் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

இதற்கிடையில், புதிய டாஸ்க்கின் காரணமாக இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருந்தது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக (ராஜகுருவாக) விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த டாஸ்க் பெயரிலும் பல்வேறு விஷயங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. மறுபக்கம் அசீம் மற்றும் விக்ரமன் இடையே நடந்த சண்டை, அசீம் மற்றும் ADK ஆகியோரிடையே நடந்த சண்டை என அடுத்தடுத்து பல களேபரங்கள் கூட பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி இருந்தது.

மேலும் பிக்பாஸ் 6 வது சீசனின் ஆரம்பத்தில் இருந்தே சிறந்த போட்டியாளர்களில் ஒருவராகவும் ஷிவின் திகழ்ந்து வருகிறார். தனது நிலைப்பாட்டை தொடர்ந்து சரியான பக்கத்தில் வைத்து வரும் ஷிவின், பலரின் ஃபேவரைட் போட்டியாளராகவும் உள்ளார். அப்படி ஒரு சூழலில், ஷிவினுக்கு ராபர்ட் மாஸ்டர் கொடுத்த தண்டனை தொடர்பான விஷயம், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் கருத்துக்களை பெற்று வருகிறது.

ராஜா ராணி டாஸ்க் மத்தியில், ஷிவினுக்கு தண்டனை கொடுக்கும் ராஜாவாக இருக்கும் ராபர்ட் மாஸ்டர், மேக்கப் போடக் கூடாது எனவும் கூறி தனலட்சுமி உதவியுடன் ஷிவின் போட்டிருக்கும் மேக்கப்பையும் அழிக்க உத்தரவு போடுகிறார். அதே போல, உணவு உண்டு கொண்டிருக்கும் போது ஷிவின் முகத்தை போல, உணவு இருப்பதாகவும் சக போட்டியாளர்கள் மத்தியில் கூறுகிறார் ராபர்ட் மாஸ்டர். இப்படி ஷிவின் குறித்து வெளிப்படையாக ராபர்ட் மாஸ்டர் பேசும் விஷயங்கள் பெரிய அளவில் சலசலப்பை பார்வையாளர்கள் மத்தியில் உண்டு பண்ணி உள்ளது.

Also Read | PS1, இரவின் நிழல், VTK படங்களின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்.. AR ரஹ்மான் கொடுத்த செம அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Robert comments about shivin in bigg boss house

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Robert, Shivin, Vijay Television, Vijay tv will find this news story useful.