மறைந்த நடிகர் விவேக் மனைவியின் நெகிழ்ச்சியான கோரிக்கை.. நிறைவேற்றிய தமிழக அரசு! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பத்மஸ்ரீ மற்றும் சின்ன கலைவாணரும் நகைச்சுவை நடிகருமான விவேக் கடந்தாண்டு காலமானார்.

Advertising
>
Advertising

Also Read | குழந்தை பிறப்புக்கு பின் காஜல் அகர்வாலின் முதல் வைரல் போட்டோ.. கூட யார் இருக்காங்க தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் விவேக். 90 களின் பிற்பகுதியில் இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவைக் நடிகராக திகழந்தவர் விவேக்.  இவர் சக நடிகரான வடிவேலுவோடு இணைந்து நடித்த காட்சிகள் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன.  சந்தானம் மற்றும் சூரி ஆகிய நடிகர்களோடும் இணைந்து சில படங்களில் விவேக் நடித்துள்ளார். சமூகக் கருத்து சார்ந்த திரைப்படங்களில் நடித்ததால் சின்னக்கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டார்.

சில படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் திரையில் நடித்துள்ள விவேக், பொது வாழ்க்கையில் சுற்றுச் சூழல் ஆர்வலராகவும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு க்ரீன் குளோபல் என்ற இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார். முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் மீது கொண்ட அதீத ஈடுபாட்டால் அவரின் சொல்லுக்கேற்ப இந்த இயக்கத்தை அவர் வழி நடத்தினார்.

கடந்த அண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி விவேக் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார்.  இந்நிலையில் சில நாட்களுக்கு முன் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, சென்னை சாலிகிராமம் பகுதியில் நடிகர் விவேக் வீடு இருக்கும் சாலைக்கு நடிகர் விவேக்கின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு நடிகர் விவேக் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயரைச் சூட்டும் அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும் அச்சாலைக்கும் விவேக் பெயரான "சின்ன கலைவாணர் விவேக் சாலை" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மறைந்த நடிகர் விவேக் மனைவியின் நெகிழ்ச்சியான கோரிக்கை.. நிறைவேற்றிய தமிழக அரசு! முழு தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Road in Chennai Saligramam named actor Vivek as per Tamil Nadu Govt Order

People looking for online information on Chennai, Chinna Kalaivanar Vivek Road, Saligramam, Vivek will find this news story useful.