RJ பாலாஜி - சத்யராஜ் நடிக்கும் புதிய படம்! வெளியான கலர்ஃபுல் FIRST LOOK.. இந்த தேதில தான் ரிலீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: போனிகபூர் தயாரிப்பில் RJ பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு & ரிலீஸ் தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி.  ரேடியோவில் சினிமா விமர்சனங்கள் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். சினிமாவுக்கு செலவளிக்கும் 120 ரூபாயை மையமாக வைத்தே இவருடைய சினிமா விமர்சனங்கள் புகழ் பெற்றன.

பின் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாகும், தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ரீமேக் படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் யோகி பாபு ஆர். ஜே பாலாஜியுடன் கௌரவத்தோற்றத்தில் நடிக்கிறார். இந்த ரீமேக் படத்திற்கு 'வீட்ல விசேஷம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கோயமுத்தூரில் நடைபெற்ற இந்த படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் நடந்து முடிந்தது, இந்த 2022 ஆம் ஆண்டு  இந்த படம் திரைக்கு வருவதாக ஆர் ஜே பாலாஜி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஜூன் 17,2022 அன்று இந்த படம் வெளியாக உள்ளது. முதல் லுக் போஸ்டரில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஊர்வசிக்கு வளைகாப்பு போடுவது போன்ற புகைப்படத்துடன் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji Veetla Vishesham Movie Firstlook and Release date

People looking for online information on Boney kapoor, R J Balaji, Sathyaraj, Urvashi, Valimai, Veetla Vishesham will find this news story useful.