வித்தியாசமாக நடக்க உள்ள ‘வீட்ல விசேஷம்’ இசை வெளியீடு… ரசிகர்களை அழைக்கும் R J பாலாஜி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வீட்ல விசேஷம் படத்தின் ஆடியோ வெளியீடு பற்றிய அறிவிப்பை நடிகர் R J பாலாஜி வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

R J பாலாஜி….

பண்பலை தொகுப்பாளராக வேலை செய்துவந்த ஆர் ஜே பாலாஜி, தனது நகைச்சுவையான மற்றும் தனித்துவமான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்தவர். சினிமா விமர்சனங்களை செய்துவந்த அதன் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தால் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதலில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த அவர் LKG, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்து கவனம் பெற்றுள்ளார்.

வீட்ல விசேஷம்…

அந்த படங்களை அடுத்து ஆர் ஜே பாலாஜி இப்போது போனி கபூரின் பே வாட்ச் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆகும். தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கியும் உள்ளார் பாலாஜி. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளின் நடுவே நடைபெற்று கவனத்தைப் பெற்றது.

ரசிகர்களோடு ஆடியோ வெளியீடு

இதையடுத்து இந்த படத்தில் இடம்பெற்றுள்ள Daddy பாடல் சமீபத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது. இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீடு நாளை ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடக்க உள்ளது. இதில் ரசிகர்களும் கலந்துகொண்டு படக்குழுவினருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என R J பாலாஜி அறிவித்துள்ளார். இது சம்மந்தமான வீடியோவை அவர் சமூகவலைதளத்தில் பகிர, அது வைரலாகி வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

RJ balaji veetla vishesham movie audio launch june 10

People looking for online information on R J Balaji, Sathyaraj, Veetla Vishesham will find this news story useful.