"அது மூக்குத்தி முருகன் இல்ல.. மூக்குத்தி அம்மன்".. அறிமுகம் இல்லாத வீட்டு விசேஷம்.. RJ பாலாஜி SURPISE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூரின் பே வியூ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் திரைப்படத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "என் மருமகளாவும் நடிச்சிருப்பாங்க.. ஜோடியாவும் நடிச்சிருப்பாங்க" - சத்யராஜ் கலகலப்பு பேட்டி

இந்தியில் வெளியாகி, தேசிய விருதை வென்ற பதாய் ஹோ என்கிற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து இயக்கியும் உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

இதனையொட்டி இந்த படம் தொடர்பில், பிஹைண்ட்வுட்ஸூடன் இணைந்து வீட்டில் விசேஷம் வைத்துள்ள நகர மக்களின் இல்லங்களுக்கு ரேண்டமாக போகலாம் என வீட்ல விசேஷம் படக்குழுவினர் சார்பாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். அதன்படி, காயத்ரி என்கிற பெண்மணியின் வளைகாப்புக்கு எவ்வித முன் தகவலும் இன்றி திடீரென நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சென்று சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த இந்த வளைகாப்பு நிகழ்வுக்கு நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வருவது யாருக்குமே தெரியாது. வளைகாப்பு நிகழ்வுக்குரிய பெண்ணின் கணவருக்கு மட்டுமே இந்த தகவல் மேலோட்டமாக தெரியப்படுத்தப் பட்டிருந்தது. இருப்பினும் முன்பின் தெரியாத ஒரு குடும்பத்தின் இந்த நிகழ்வுக்கு தாம்பூல தட்டுடன் சென்ற ஆர்.ஜே.பாலாஜி, “எனக்கே பதட்டமா இருக்கு.. இந்த குடும்பத்துல நம்மள ஒருத்தர சேர்த்துகிட்டாங்களேன்னு தெரியல” என்று சொல்லி எண்ட்ரி கொடுத்தார்.

அதன் பின்னர், வளைகாப்பு கொண்டாடப்படும் பெண்ணான காயத்ரியின் கையில் சீர்வரிசை தட்டை கொடுத்த பாலாஜி, “எங்க படத்துல இப்பதான் என் அம்மாவுக்கு வளைகாப்பு நடத்தினோம்.. நான் ஒரு அண்ணனாக உங்களுக்கு சந்தனம், மஞ்சள் வைத்துவிடுகிறேன்மா..” என்று சொல்ல, அருகில் இருந்த ஒரு நபர் மூக்குத்தி முருகன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜியை பார்த்ததாக சொல்ல, “அது மூக்குத்தி அம்மன்மா” என சொல்லி பாலாஜி கலகலப்பாக பேசினார்.

மேலும் வளைகாப்பு தம்பதியை வாழ்த்திய பின்னர், அவர்களிடம் ‘வீட்ல விசேஷம்’ திரைப்படத்திற்கான அழைப்பை கொடுத்து, “குழந்தை பிறக்கும் முன் நீங்கள் பார்த்த படமாக வீட்ல விசேஷம் படத்தை சொல்லுங்கள்.!” என சொல்லி, அனைவருடனும் புகைப்படம் எடுத்துவிட்டு மீண்டும் வாழ்த்திவிட்டு, நன்றி தெரிவித்து சென்றார். இது தொடர்பான exclusive வீடியோ இணைப்பில் உள்ளது.

Also Read | "நான் சினிமாவுக்கு வந்ததே இப்படி தான்".. சிவகுமார் குடும்பம் பற்றி சத்யராஜ் நெகிழ்ச்சி..

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji Suprise at random baby shower veetla vishesham

People looking for online information on RJ Balaji, Sathyaraj, Urvashi, Veetla Vishesham will find this news story useful.