ஹிந்தி திணிப்பிற்கு ஆதரவாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான ‘எல்.கே.ஜி’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹிந்து ஒரு தேசிய மொழியல்ல என்ற ஹேஷ்டேக்குடன் ‘எல்.கே.ஜி’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை தற்போது பகிர்ந்துள்ளார். எல்.கே.ஜி படத்தில் டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜியிடன் டிவி தொகுப்பாளர் ஹிந்தியில் உரையாடும் காட்சிக்கு ஆர்.ஜே.பாலாஜி காமெடி கலந்த கருத்துடன் பதிலளிக்கிறார்.
அவரது ட்வீட்டில், ‘தமழ்நாடு ஹிந்தியை எதிர்க்கவில்லை. ஹிந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். நிறைய மொழிகளை தெரிந்துக் கொள்வதில் தவறில்லை. அது ஒரு சாய்ஸாக இருக்க வேண்டுமே தவிற திணிக்கக் கூடாது. எல்.கே.ஜி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி இதோ’ என பகிர்ந்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், ஜே.கே.ரித்தீஷ், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.