விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு குடும்பத்தினரையும், கண்ணம்மா உட்பட யாரையும் அண்மையில் அடையாளம் தெரியாமல் போனது.
Image Credit : vijay television
Also Read | பரவசம் அடைந்த ரசிகர்.. “போய் .. வேலைய பாருங்க.. அதான் முக்கியம்” .. குணமா சொன்ன ரஜினி.!
அதன் பின்னர் மருத்துவர் பாரதியின் ஆழ்மனதில் கண்ணம்மா பெயர் ஆழமாக பதிந்திருக்கிறது, ஆனால் கண்ணம்மாவை நேரில் பார்க்கும்போது அவருக்கு யார் என்று தெரியவில்லை, எனினும் பாரதிக்கு பழைய நினைவுகள் வரவேண்டும் என்றால் கண்ணம்மா தான் உதவி செய்ய வேண்டும் மீண்டும், அவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும், கண்ணம்மா பாரதியுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். முடிந்தால் பாரதியின் பழைய நாட்களுக்கு, அதாவது கண்ணம்மாவை பாரதி காதலித்த நாட்களுக்கு சென்று பழைய காட்சிகளை மீண்டும் ரீகிரியேட் செய்தால், பாரதியின் பழைய எல்லா நினைவுகளும் அவருக்கு நினைவுக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூற அதற்கு கண்ணம்மாவோ தன்னால் முடியாது என முதலில் கூறுகிறார்.
Image Credit : vijay television
பிறகு அனைவரும் கெஞ்சியதால் இதற்கு கண்ணம்மா சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வெளியான புதிய ப்ரோமோவில் பாரதிக்கு பழைய நினைவுகளை கொண்டு வருவதற்காக கண்ணம்மா பழைய நாட்களில் இருந்தது போலவே பாவாடை தாவணி கட்டிக்கொண்டு, சில பெண்களுடன் குளத்தங்கரையில் உள்ள படிக்கட்டுகளில் கையில் விளக்குகளை ஏந்தி கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி வந்து குளத்தில் விளக்குகளை விடுகிறார். அந்த ஆற்றங்கரை படிக்கட்டில் பாரதி அமர்ந்திருக்கிறார். கண்ணம்மா விளக்கை குளத்தில் விட்டு விட்டு படிக்கட்டு ஏறி வரும்போது பாரதி கண்ணம்மாவை பார்க்கிறார்.
Image Credit : vijay television
கண்ணம்மாவும் பாரதியை பார்க்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் குளக்கரையில் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். இதனை தொடர்ந்து பாரதிக்கு அனைத்தும் நினைவுக்கு வருகிறது. ஆனாலும் கண்ணம்மாவின் மனம் மாறுவதற்காக அனைவரும் காத்திருந்தனர். ஒரு வழியாக மீண்டு வந்த பாரதியை கண்ணம்மா ஏற்றுக்கொண்டு தானும் அவருடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததை அடுத்து, விவாகரத்தான இவர்களுக்கு திரும்பவும் திருமணம் செய்ய அனைவரும் ஆலோசிக்கின்றனர். இதற்கு பாரதி & கண்ணம்மா இருவருமே சம்மதிக்கின்றனர்.
Image Credit : vijay television
இந்நிலையில் இந்த திருமண விசேஷத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கலந்துகொள்வதாக பேசப்பட்டு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இது தொடர்பான ஃபோட்டோவில், ஆர்.ஜே.பாலாஜி, வெண்பாவின் கணவர் கதாபாத்திரமான ரோஹித்துடன் அமர்ந்துள்ள ஃபோட்டோ வைரலாகி வருகிறது. இன்னும் எந்தெந்த செலிபிரிட்டிகள் இந்த திருமண எபிசோடில் கலந்துகொள்ளவுள்ளார்கள் என்பது எபிசோடில் தெரியவரும். இதேபோல் இத்துடன் இந்த சீரியலின் முதல் சீசன் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read | Thalapathi67 -ல் பிரபல நடிகர்.! “சக்கு சக்கு வத்திக்குச்சி on Board” - பிரபல இயக்குநரின் வைரல் பதிவு.!