ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி.
Images are subject to © copyright to their respective owners

ஆரம்பத்தில் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் ஆர.ஜே. பாலாஜி நடித்தார். இதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கான "வீட்ல விசேஷம்" படத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்தார்.
"வீட்ல விசேஷம்" திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்றது.
Images are subject to © copyright to their respective owners
ரன் பேபி ரன்
'வீட்ல விஷேசம்' படத்தினை அடுத்து ‘சர்தார்’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் R.J.பாலாஜி, ரன் பேபி ரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் 03 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இந்த படத்தினை ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கி இருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
பொதுவாக, காமெடி கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடிக்கும் ஆர் ஜே பாலாஜி, ரன் பேபி ரன் திரைப்படத்தில் சற்று சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே வேளையில், அவரது நடிப்பும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், ஆர் ஜே பாலாஜி அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பிரத்யேகமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners
"சொர்க்க வாசல்"
அதன்படி, ஆர் ஜே பாலாஜி அடுத்து நடிக்க உள்ள திரைப்படத்திற்கு "சொர்க்க வாசல்" என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும், ஆர் ஜே பாலாஜியுடன் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாக தகவல் கூறும் சூழலில், சொர்க்க வாசல் படப்பிடிப்பும் சமீபத்தில் ஆரம்பமாகி உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.