வித்தியாசமான லுக்கில் RJ பாலாஜி.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 1ST லுக் போஸ்டர்! முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

RJ Balaji Next Movie Singapore Saloon first look poster
Advertising
>
Advertising

Also Read | யுவன் ஷங்கர் ராஜாவுக்கு துபாய் அரசு கொடுத்த மிகப்பெரிய அந்தஸ்து! வைரல் போட்டோஸ்

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. ரேடியோவில் சினிமா விமர்சனங்கள் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். சினிமாவுக்கு செலவளிக்கும் 120 ரூபாயை மையமாக வைத்தே இவருடைய சினிமா விமர்சனங்கள் புகழ் பெற்றன.

பின் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

கடைசியாக பாலாஜி, போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக் "வீட்ல விசேஷம்" படத்தில் நடித்தார்.

"வீட்ல விசேஷம்" திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்றது.

இந்நிலையில் 'வீட்ல விஷேசம்' படத்தினை அடுத்து ஆர். ஜே.  பாலாஜி, பிரபல இயக்குனர் கோகுல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் கோகுல், ஏற்கனவே ரௌத்திரம், ஜூங்கா, "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா", காஸ்மோரா போன்ற படங்களை இயக்கியவர் ஆவார்.

இந்த புதிய படத்திற்கு "சிங்கப்பூர் சலூன்" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி துவங்கும் முன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் லோகேஷ் கனகராஜ் இந்த போஸ்டரை வெளியிட்டார்.

இந்த படத்தில் பாலாஜிக்கு ஜோடியாக நடிகை ஷிவானி ராஜசேகர் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி உள்ளது என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | "இது தமிழ் சினிமாவின் பொற்காலம்".. லவ் டுடே, விக்ரம் படங்கள் குறித்து பேசிய சிம்பு!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji Next Movie Singapore Saloon first look poster

People looking for online information on Lokesh Kanagaraj, RJ Balaji, RJ Balaji Next Movie, Singapore Saloon, Singapore Saloon first look poster will find this news story useful.