"FANS மீட் ஓகே, இது என்னண்ணே HATERS மீட்டு?".. RJ பாலாஜி கலாய்.. ஒவ்வொரு காமெடியும் ஒவ்வொரு ரகம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் அடுத்ததாக ரன் பேபி ரன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | "அந்த மாதிரி பேசுறவங்க பாவம்.." விக்ரமன்கிட்ட போய் நின்ன கமல்.. அசிம் ரியாக்ஷன் இது தான்!!

பிப்ரவரி 3 ஆம் தேதியன்று இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

பொதுவாக, காமெடிக் கதைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்வு செய்து ஆர் ஜே பாலாஜி நடிப்பார். அவர் நடிப்பில் வெளியாகி இருந்த எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்கள் அந்த வகையில் தான் அமைந்திருந்தது. ஆனால், ரன் பேபி ரன் படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கும் போது ஒரு சீரியஸான கதைக் களம் போல தெரிகிறது. எப்போதும் சிரித்துக் கொண்டும், கலாய் கொடுத்து கொண்டும் இருக்கும் ஆர் ஜே பாலாஜி, இதில் சற்று சீரியஸான ஒரு கதாபாத்திரத்திலும் வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, ரசிகர்களை வைத்து Haters Meet என்ற பெயரில் ஆர்ஜே பாலாஜி நிகழ்ச்சி நடத்தியது தொடர்பான விஷயயம், அதிகம் வைரலாகி வருகிறது. பொதுவாக ஏதாவது ஒரு பிரபலம் தங்கள் ரசிகர்களை சர்ப்ரைஸாக வரவைத்து, அவர்கள் சிறந்த விஷயங்களை பேசி கொண்டிருக்கும் போது அவர்கள் முன்னிலையில் திடீரென தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

அதே ஐடியாவை கையில் எடுத்த பாலாஜி, சற்று வித்தியாசமாக அதாவது "Haters Meet" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். இதில், ஆர்ஜே பாலாஜியிடம் பிடிக்காத விஷயம் குறித்து ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென பின்பக்கம் இருந்து சர்ப்ரைஸாக வரும் ஆர்ஜே பாலாஜி, பெரிய அளவில் ஷாக் ஒன்றையும் கொடுக்கிறார்.

யாரை பற்றி விமர்சன கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கிறோமோ அவர்களே இப்படி முன்னாள் வந்து நிற்பது, ஒரு சில ரசிகர்களை திக்குமுக்காட வைத்தும் வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

Also Read | "அடிக்காதமா, வலி தாங்க முடியல".. கதறிய டான்சர் ரமேஷ்.. பழைய வீடியோவால் பரபரப்பு!!

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji Haters meet vith fans viral video

People looking for online information on RJ Balaji, RJ Balaji Haters meet, RJ Balaji Haters meet vith fans will find this news story useful.