அட.. பிரபல OTT -யில்.. காமெடி - குடும்ப சென்டிமென்ட் கலந்த "வீட்ல விசேஷம்" படம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான 'வீட்ல விஷேசம்' படம் ஒடிடியில்வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. ரேடியோவில் சினிமா விமர்சனங்கள் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். சினிமாவுக்கு செலவளிக்கும் 120 ரூபாயை மையமாக வைத்தே இவருடைய சினிமா விமர்சனங்கள் புகழ் பெற்றன.

பின் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

கடைசியாக பாலாஜி, போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக் வீட்ல விசேஷம் படத்தில் நடித்தார். "வீட்ல விசேஷம்" திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்ற நிலையில் படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி, இந்த படம் ஜி5 ஒடிடியில் ஜூலை 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. ஜி5 பிரிமியம் அக்கவுண்டிற்கு முதல் கட்டமாக இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக டிரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு இந்திய சென்சார் போர்டு மூலம் U சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்ல  விஷேசம் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா RK எடிட்டிங் பணிகளை மேற்கொண்டார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rj balaji boney kapoor veetla vishesham zee5 ott release date

People looking for online information on OTT, R J Balaji, Veetla Vishesham, Zee5 will find this news story useful.