போனிகபூர் தயாரிப்பில் RJ பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் செம்ம தலைப்பு இது தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: போனிகபூர் தயாரிப்பில் RJ பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

எதற்கும் துணிந்தவன் எதுல Release? ஒட்டுமொத்த வதந்திகளுக்கும் ஒரே full Stop வைத்த இயக்குனர்!

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. இவர் முக்கிய வேடத்தில் நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

 

இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கவும் செய்கிறார். இந்த பதாய் கோ திரைப்படம் இந்தியில் 220 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படமாகும், தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ரீமேக் படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சத்யராஜ், ஊர்வசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் யோகி பாபு ஆர். ஜே பாலாஜியுடன் கௌரவத்தோற்றத்தில் நடிக்கிறார். இந்த ரீமேக் படத்திற்கு 'வீட்ல விசேஷங்க' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோயமுத்தூரில் நடைபெற்ற இந்த படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் நடந்து முடிந்தது, இந்த 2022 ஆம் ஆண்டு  இந்த படம் திரைக்கு வருவதாக ஆர் ஜே பாலாஜி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். போனிகபூர் தயாரிப்பில் இந்த வருடம் தமிழில் வலிமை, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்கள் வெளி வர இருக்கின்றன.

RJ பாலாஜி அடுத்ததாக இயக்கி நடிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நடிக்க உள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். வீட்ல விஷேசங்க படத்திற்கு பிறகு RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் 4வது திரைப்படம் இதுவாகும்.

BREAKING: 'BEAST' படத்தின் மிக முக்கிய உரிமையை கைப்பற்றிய இந்தியாவின் முன்னணி நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

RJ Balaji Baadhai Ho Tamil remake titled as VEETLA VISHESHANGA

People looking for online information on போனிகபூர், RJ பாலாஜி, RJ Balaji, Veetla Visheshanga will find this news story useful.