ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி.
ரேடியோவில் இவர் செய்த சினிமா விமர்சனங்கள் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். சினிமாவுக்கு செலவளிக்கும் 120 ரூபாயை மையமாக வைத்தே இவருடைய சினிமா விமர்சனங்கள் புகழ் பெற்றன.
பின் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் ஆர.ஜே. பாலாஜி நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
சமீபத்தில் பாலாஜி, போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக் "வீட்ல விசேஷம்" படத்தில் நடித்தார்.
"வீட்ல விசேஷம்" திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்றது.
'வீட்ல விஷேசம்' படத்தினை அடுத்து ‘சர்தார்’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் R.J.பாலாஜி, ரன் பேபி ரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 03.02.2023) அன்று திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஆர்.ஜே. பாலாஜி, பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக தயாரிப்பாளர் S.லக்ஷ்மன் பரிசளித்த மோதிரம் குறித்து பதில் அளித்தார். "இந்த மோதிரம் என்ன கல்லுனு தெரியல. பாக்குறதுக்கு நல்லா இருந்தது. பச்சைக் கலர் கல்லு. சுத்தி நல்லா மினுக்குது. போடும் போது நல்லா இருந்தது. அடுத்த படம் நடிச்சு முடிச்சுட்டேன். ரொம்ப சந்தோஷமா படம் நல்லா போறதால இதை கொடுத்தார். அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் இது இல்ல. இந்த மோதிரம் அன்பின் வெளிப்பாடு" என ஆர்.ஜே. பாலாஜி பதில் அளித்தார்.
தற்போது ஆர். ஜே. பாலாஜி, பிரபல இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து வருகிறார்.