RJ பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் த்ரில்லர் படம்... போஸ்டருடன் வெளியான ரிலீஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர் ஜே பாலாஜி & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர் & ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. ரேடியோவில் சினிமா விமர்சனங்கள் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். சினிமாவுக்கு செலவளிக்கும் 120 ரூபாயை மையமாக வைத்தே இவருடைய சினிமா விமர்சனங்கள் புகழ் பெற்றன.

பின் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

கடைசியாக பாலாஜி, போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக் "வீட்ல விசேஷம்" படத்தில் நடித்தார்.

"வீட்ல விசேஷம்" திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்றது.

'வீட்ல விஷேசம்' படத்தினை அடுத்து ஆர். ஜே.  பாலாஜி, பிரபல இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ‘சர்தார்’ படத்தை தயாரித்த  பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்‌ஷ்மன் குமார் தயாரிப்பில் R.J.பாலாஜி ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கும் தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்த படத்தினை ஜியன் கிருஷ்ணகுமார்  இயக்குகிறார். இவர், பிருத்திவ்ராஜ் நடித்த மலையாள படமான “தியான்” ( ‘TIYAAN’ )  படத்தை இயக்கியவர். இப்படம் திரில்லர் படமாக உருவாகிறது.

இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஆர்யா நடித்த டெடி, கேப்டன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். மதன் எடிட்டராக பணியாற்றுகிறார். பாபு தமிழ் வசனம் எழுதுகிறார். கலை இயக்குனராக வீரமணி பணியாற்றுகிறார். சாம் CS இசையமைக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரன் பேபி ரன் என தலைப்பிடப்பட்டு முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Rj Balaji Aishwarya Rajesh Run Baby Run First Look Poster

People looking for online information on Aishwarya Rajesh, RJ Balaji, Run Baby Run will find this news story useful.