நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய கதையை நடிகர் விஜய் ரசித்து கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பாரதி கண்ணம்மா முடியுதா..? .. குறுக்க இந்த கௌஷிக் (2வது சீசன்) வந்தா..? இயக்குநர் சொல்வது என்ன?
ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்து, ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ரன் பேபி ரன். பிப்ரவரி 3-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், ஆர்.ஜே.பாலாஜி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே இப்படம் குறித்து பத்திரிகையாளர்கள் நிகழ்வில் பேசியிருந்த ஆர்.ஜே.பாலாஜி, “இந்த படத்தில் 33வது மாடியின் பால்கனி மீது ஏறி நிற்கும் காட்சி ஒன்று இருக்கும். மேலும், அந்த காட்சி நடிக்க கயிறு பயன்படுத்தலாம் என்று கேட்டேன். இல்லை அது யதார்த்தமாக இருக்காது. அதனால் நீங்கள் அப்படியே நில்லுங்கள் என்றார். நானும் பயமில்லாமல் நடித்து முடித்துவிட்டேன். அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் கார் ஓட்டும் காட்சி அப்போது திடீரென எதிரில் லாரி வந்தது. நான் அவரிடம் சார் லாரி வருகிறதே என்று கேட்டதற்கு “அதை நான் தான் அனுப்பினேன்” என சிரித்துக்கொண்டே வேலை வாங்கிவிட்டார்.
தயாரிப்பாளர் லக்ஷ்மன் சார் பெரிய பொருட்செலவில், நிறைய கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இப்படத்தின் பணியினால் சாம் சி.எஸ். வரவில்லை. ராதிகா மேடமுக்கு நன்றி. இப்படத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி.
Images are subject to © copyright to their respective owners.
இவர்கள் கூறியதுபோல, நான் மட்டும்தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவன் என்பது அல்ல. ஒரு சராசரி மனிதன், இவ்வளவு பெரிய சண்டைக் காட்சிகளை செய்வானா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு தான் இருப்பான். ஒரு வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் மாற்றம் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு திரில்லராக இருக்கும். இறுதிவரை குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.” என கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யிடம் கதை சொன்னது பற்றி குறிப்பிட்டுள்ள ஆர்.ஜே.பாலாஜி, “கடந்த வருடம் ஜனவரி 27ஆம் தேதி நடிகர் விஜய் கதை கேட்க அழைத்தார். 40 நிமிடங்கள் ஆனது. நன்றாக சிரித்துவிட்டு, உறுதியாகவும், நன்றாகவும் இருக்கிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி விடலாமா? என்று கேட்டார். வீட்ல விஷேஷம் படத்திற்கே 5 மாதங்கள் ஆனது. உங்களை இயக்க தயாராவதற்கு குறைந்தது ஒரு வருட காலமாவது வேண்டும் என்றேன். அவரும் சரி என்றார். இதற்கிடையில் அவருக்கு ஏற்ற வகையில் வேறு ஏதேனும் கதை தோன்றினாலும் கூறுவேன். ஆனால், அவருக்கு கூறிய கதை அவருக்கு மட்டும் தான். வேறு யாரையும் வைத்து இயக்க மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.
Also Read | ட்விட்டரில் இணைந்த தளபதி விஜய் அம்மா..! முதல் பதிவே இதுதான்... நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..