பிரபல OTT-யில் ரிலீஸாகும் புதிய வெப் சீரிஸ்.. கலர் ஃபுல் உடையில் ரிது வர்மா நடத்திய போட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்க கூடியவர் நடிகை ரிது வர்மா.

Advertising
>
Advertising

Also Read | லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் "தி வாரியர்".. பட டிரெய்லர் ரிலீஸ் எப்போ? தெறி அப்டேட்

நவநாகரீக நகர்ப்புற வேடங்களிலும் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களிலும் பொருந்தக்கூடிய அரிதானவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத் ஈர்த்திலிருந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்தது வரை, ரிது வர்மா ஒரு சிறந்த நடிகையாக தனது திறனை நிரூபித்துள்ளார்.

தற்போது, அவர் அடுத்தடுத்து மிக சுவராஸ்யமான பல படங்களில் நடித்து வருகிறார், அவை தயாரிப்பின்  பல்வேறு கட்டங்களில் உள்ளன. குறிப்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் உடன் துருவ நட்சத்திரம், விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படங்கள் குறிப்பிடத்தக்கது.

இது போக ஓகே ஓக ஜீவிதம் (தெலுங்கு)- கானம் (தமிழ்) என்ற இருமொழித் திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் (தெலுங்கில் ஆகாசம்) படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரடக்சன்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரிது வர்மா, விரைவில் மலையாள திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமேசான் பிரைம் ஒடிடிக்காக "மாடர்ன் லவ் ஹைதராபாத்'  என்ற வெப் சீரிஸ் வரும் ஜூலை 8 ஆம் நாள் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான ப்ரோமோஷனை முன்னிட்டு ரிது வர்மா புதிய போட்டோஷூட் நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராபர் டேனியல் சிந்தா எடுத்துள்ளார்.

Also Read | சாலை விபத்தில் சிக்கிய KGF படப்புகழ் நடிகர் பிஎஸ் அவினாஷ்.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Ritu Varma Latest Photoshoot for Modern Love Hyderabad web series

People looking for online information on Ritu Varma, Ritu Varma Latest Photoshoot, Web Series will find this news story useful.