விஷாலின் 33வது படமாக உருவாகும் புதிய படமான 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.
Also Read | உதயநிதி - நித்தி அகர்வால் நடிக்கும் புதிய படம்.. டைட்டிலுடன் வெளியான நேர்த்தியான FIRST LOOK!
விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில் வர்மா ,நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் .இசை அசுரன் ' ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .
அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய 'வலிமை' விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்குனராக உமேஷ் ராஜ்குமார் பணியாற்றுகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது.
இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்துக்காக பூந்தமல்லி சுந்தர் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக ஒரு செட் அமைக்கப்பட்டு அதில் ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த செட்டில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இணைந்து ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் சொலல்ப்படுகிறது. இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ரீது வர்மா விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளன. மேலும் இந்த படத்தில் நடிகை ரீது வர்மா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | கமல் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. வெளியான சூப்பர் அப்டேட்!