BREAKING: அடக்கடவுளே!!.. #RIPANANDAKANNAN .. ஆனந்த கண்ணன் அதிர்ச்சி மரணம் .. பிரபல VJ, நடிகர்.. என்ன ஆச்சு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல விஜே, நடிகர் ஆனந்தக் கண்ணன் திடீரென மரணம் அடைந்துள்ளார் என்கிற செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

1990-2000 இடைப்பட்ட காலத்தில் பிரபலமாகி 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற விஜேவாக பிரபலமான ஆனந்த கண்ணன், அதன் பின்னர் வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே சன். டி.வி.யில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் நாயகனாக நடித்தார். 

இந்நிலையில் தான் நடிகர், விஜே ஆனந்த கண்ணன் திடீரென மரணம் அடைந்துவிட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நடிகர் ஆனந்த கண்ணன் கேன்சர் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. நடிகர் ஆனந்த கண்ணனின் திடீர் இறப்பு திரை மற்றும் சின்னத்திரை உலகம், 90s Kids என பலரையும் மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

BREAKING: அடக்கடவுளே!!.. #RIPANANDAKANNAN .. ஆனந்த கண்ணன் அதிர்ச்சி மரணம் .. பிரபல VJ, நடிகர்.. என்ன ஆச்சு? வீடியோ

RIP Ananda kannan VJ 90s Kids favourite passed away

People looking for online information on RIPanandakannan, VJ Ananda Kannan will find this news story useful.