ரியோ ராஜ் நடிக்கும் புதிய படம்.. க்ளாப் போர்ட் அடித்து துவங்கி வைத்த லோகேஷ் கனகராஜ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி மூலமாக பிரபலமானவர் நடிகர் ரியோ ராஜ். முன்னதாக இவர் நடித்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் அண்மையில் ரிலீஸ் ஆனது.

Rio Raj Starring new film pooja Lokesh Kanagaraj launched
Advertising
>
Advertising

Also Read | Bigg boss 6 tamil : ராபர்ட் சாப்பிடாம நான் சாப்பிட மாட்டேன்.. அடம் பிடிச்ச ரச்சிதா .. தூதுபோன ஷெரினா..! 🤗

ஏற்கனவே நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் நாயகனாக நடித்த ரியோ, தற்போது கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.  விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜையில் இப்படத்தின் முதல் ஷாட்டை க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

Rio Raj Starring new film pooja Lokesh Kanagaraj launched

இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் இப்படத்தில் சார்லி, 'கோலமாவு கோகிலா’ படப்புகழ் அன்பு தாசன், ‘கனா காணும் காலங்கள்’ புகழ் ஏகன், யூடியூப் புகழ் கெவின் ஃபெல்சன், ‘கோமாளி’, ‘வாத்தி’ படப்புகழ் ப்ரவீனா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆடி நடித்த, ‘மீசைய முறுக்கு’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரும், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவருமான ஹரி ஹரன் ராம் இப்படத்தை இயக்குகிறார்.  சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் ‘பேச்சுலர்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த, இசையமைப்பாளர் சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.  கே.ஜி.விக்னேஷ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, கே.ஜி. வருண் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக ஏபிஆர் பணிபுரிகிறார்.

ஆண் மற்றும் பெண் இடையேயான காதல், உறவுகளில் மட்டும் கவனம் குவிக்காமல் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான அன்புறவு ஆகியவை குறித்தும் இப்படம் பேசுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Also Read | Bharathi Kannamma: அதிர்ச்சி!… “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர் பரத் கல்யாண் மனைவி திடீர் மரணம்..!!

தொடர்புடைய இணைப்புகள்

Rio Raj Starring new film pooja Lokesh Kanagaraj launched

People looking for online information on Lokesh Kanagaraj, Rio Raj, Vision Cinema House will find this news story useful.