யுவன் - ரியோ இணையும் படத்தின் செம்ம CHILL அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் ஹீரோவாக நடித்து வரும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘பானா காத்தாடி’, ‘செம போத ஆகாதே’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கும் இப்படத்தில் ரியோ ராஜிற்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார். இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க பால சரவணன், முனிஷ்காந்த், ரோபோ ஷங்கர், ஆடுகள் நரேன், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பாசிட்டிவ் ப்ரிண்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் கேரள மாநிலத்தில் உள்ள வாகமன் பகுதியில் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட ஷூட்டிங் பணிகள் சிக்கிம் மாநிலத்தில் நடைபெறவுள்ளதாக நடிகர் ரியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ட்வீட்டுடன் சில புகைப்படங்களையும் ரியோ பகிர்ந்துள்ளார். இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Rio Raj and Badri Venkatesh film first schedule shoot wrapped in Vagamon

People looking for online information on Badri Venkatesh, Ramya Nambeesan, Rio Raj, Yuvan Shankar Raja will find this news story useful.