பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 86வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் இன்று இந்த சீசனுக்கான Freeze டாஸ்க் துவங்குகிறது. முதல் ஆளாக ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியோவின் குடும்பம் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகின்றனர். முதலில் அவரது மனைவி நுழைய காதலே காதலே என்ற பாடல் ஒலிக்க இருவரும் எமோஷனலாக கண் கலங்குவதை காணமுடிகிறது.
Tags : Rio