இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் அருண்ராஜா காமராஜின் மனைவி உயிரிழந்ததை அடுத்து திரைத்துறையினரை இந்த சோகம் உலுக்கியுள்ளது.
அண்மைக் காலமாகவே கொரோனா தொற்றினால் நடுத்தர வயதுடைய திரைத்துறையினர் பலரும் கொரோனாவுக்கு பலியாகி வரும் சூழலில் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இதுபற்றி ட்வீட் பதிவிட்டுள்ள நடிகை ப்ரியா பவானி ஷங்கர், “இது ஒருபோதும் நடந்திருக்க கூடாதென என்று நான் விரும்புகிறேன், அருண்ராஜா காரமாராஜ்க்கும் பலத்தையும் தைரியத்தையும் கொடுக்க கடவுளை மனதார வேண்டிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமது பதிவில், “வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் வாழ்வை இழக்கும் சோகமான செய்தியாக இருக்கிறது. இதில் என்னவென்றால் இது யாருக்கும் ஏற்படக்கூடும். நீங்கள், நான், எங்கள் அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், யாரும்! ப்ளீஸ் பாதுகாப்பாக இருங்கள்.” என அவர் பதிவிட்டுள்ளார்.
ALSO READ: பெரும் சோகம்'!.. அதிர்ச்சியை ஏற்படுத்திய "அசுரன், புதுப்பேட்டை" பட நடிகரின் மரணம்!