இந்தியத் திரையுலகில் மறுக்க முடியாத பெயர்களில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் பெயரும் ஒன்று, தெலுங்கு திரைப்படமான சிவாவிலிருந்து தொடங்கியது அவரது திரைப்பயணம், இந்தப் படத்தில் நாகார்ஜுனா, அமலா மற்றும் ரகுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். த
மிழில் திருடா திருடா, மற்றும் ஜித்தன் ஆகிய படங்களின் எழுத்தாளர் ஆர்ஜிவி என்பது பலருக்குத் தெரியாது. ஜித்தன் அவர் இந்தியில் தயாரித்த கயாப் என்ற படத்தின் ரீமேக் ஆகும்,
அவரது சமீபத்திய படைப்பு க்ளைமாக்ஸ். இதில் மியா மல்கோவா முக்கிய வேடத்தில் நடித்தார். அடுத்து, விரைவில் வெளிவரவிருக்கும் தனது NNN - Naked Nanga Nagnam என்ற படத்தின் டிரெய்லர் வீடியோவை வெளியிட்டார் ராம் கோபால் வர்மா, இப்போது மேலும் இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்புக்களை தந்துள்ளார். அவை The Kidnapping of Katrina Kaif மற்றும் The Man who killed Gandhi.
ஆர்.ஜி.வி இந்தப் படங்களின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது