'விஸ்வாசம்' படத்துக்கு பிறகு அஜித் நடித்து வரும் படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்த படம் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்துடன் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
டிரெய்லரின் தொடக்கத்தில் மூன்று பெண்கள் தலையை குணிந்த படி அமர்ந்த படி அமைதியாக இருக்கிறார்கள். கட் பண்ணா கோர்ட். அங்கே குற்றவாளிக் கூண்டில் ஷரத்தா ஸ்ரீநாத் நிற்கிறார். அவர் முன் வக்கீலாக அஜித். இதுவரை நிசப்த அமைதி.
சிறிது நேரம் கழித்து ஷரத்தா ஸ்ரீநாத்திடம் அஜித் நீங்கள் கன்னித் தன்மையுடன் இருக்கிறீர்களா என்று கேட்கிறார். அந்த கேள்வி எவ்வளவு வீரியம் வாய்ந்தது என்பது பரபரவென எழும் யுவனின் பின்னணி இசை சொல்கிறது.
அதனைத் தொடர்ந்து சில இளைஞர்களும் இளம் பெண்களும் பெரும் பதட்டத்தில் இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து வக்கீலான ஒரு பக்கம் அஜித் கேள்விக்கணைகளைத் தொடுக்க மற்றொருபுறம் இன்னொரு வக்கீலாக ரங்கராஜ் பாண்டே பரபரப்பாக விவாதிக்க ஒரு அனல் பறக்கும் வாதம் அங்கு நடைபெறுகிறது.
கட் பண்ணா அஜித் கையில் கனத்த ஆயுதம் வைத்து ஒருவரை தாக்கி தெறிக்கவிடுகிறார். அவர் ஆக்ரோஷமாக நிற்கிறார். அங்கு ரசிகர்கள் ஒரு அதிரடி ஆக்ஷன் பிளாக்கை எதிர்பார்க்கலாம்.
படத்தின் டயலாக் ஒருத்தரு மேல விஸ்வாசம் காட்டுறதுக்கு இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க ? போன்ற படங்களின் கவனம் ஈர்க்கின்றன. பில்லா படத்துக்கு பிறகு நீரவ் ஷாவின் ஒளிப்பதில் ஒரு கிளாஸியான அஜித்தை ஸ்கிரீனில் பார்க்கலாம் என்பதற்கான டிரெய்லர் தான் இந்த டிரெய்லர். காட்சிக்கு காட்சி பரபரப்பாக நகரும் காட்சிக்கு உயிரூட்டமாக இருக்கிறது யுவனின் இசை.
டிரெய்லரில் ஒரு காட்சியில் இன்னும் இப்படி நெறய நெறய நெறய என்று வசனம் பேசுகிறார் அஜித். அது நாம் படத்தில் நிறைய நிறைய நிறைய என்பது எதிர்பார்க்கலாம் என்பதற்கான அறிகுறியாக எடுத்துக்கொண்டு நாம் காத்திருப்போம்.