நடிகை ரேவதி இயக்கும் புதிய இந்தி படம்! ஹீரோயின் இவங்களா? செம அப்டேட் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரேவதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 80 மற்றும் 90 களில் வெற்றிகரமான நடிகையாக  வலம் வந்தார்.

REVATHI JOINS HANDS WITH SHAH RUKH KHAN HEROINE FOR HER NEXT

இவர் அனைத்து முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விஜயகாந்த், மோகன் என பலருடன் நடித்துள்ளார். நடிகை ரேவதி வெறும் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்குனர், டப்பிங் கலைஞர் மற்றும் பின்னணி பாடகியாகவும் தனித்த இடத்தை பெற்றுள்ளார். நேற்று, (அக்டோபர் 7) பாலிவுட் நடிகை கஜோல், ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார்.

REVATHI JOINS HANDS WITH SHAH RUKH KHAN HEROINE FOR HER NEXT

இவர் மின்சாரக்கனவு, வேலை இல்லா பட்டதாரி-2 போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ரேவதி இயக்கும் புதிய படம் 'தி லாஸ்ட் ஹர்ரே'யின் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். கஜோல் ரேவதியுடன் அமர்ந்து இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்த பின், “ரேவதி இயக்கும் எனது அடுத்த படத்தை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி ..‘ தி லாஸ்ட் ஹர்ரே ’. உடனடியாக என்னை ஆம் என்று சொல்ல வைக்கும் ஒரு இதயப்பூர்வமான கதை!" என்று கூறியுள்ளார்.

சமீர் அரோராவால் எழுதப்பட்ட இந்த படம், ஒரு உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளது. தி லாஸ்ட் ஹர்ரேவை ப்யூவ் புரொடக்ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் சுராஜ் சிங் மற்றும் ஷ்ரத்தா அகர்வால் தயாரிக்கின்றனர்.

 

சுவாரஸ்யமாக,நடிகை கஜோல் தமிழில் அறிமுகமான 'மின்சர கனவு' படத்திற்கு கஜோலின் கதாபாத்திரத்திற்கு தமிழ் டப்பிங் செய்தது நடிகை ரேவதி தான்!. இந்த படத்தில் அரவிந்த் சுவாமி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கஜோல் கடைசியாக தன்வி ஆஸ்மி மற்றும் மிதிலா பால்கருடன் 'த்ரிபாங்கா: தெதி மேடி கிரேசி' என்ற நெட்ஃபிக்ஸ் படத்தில் நடித்தார்.

 

இதற்கிடையில், நடிகை ரேவதி கடைசியாக நெட்ஃபிக்ஸ் தொகுப்பான 'நவரசா'வில் பிஜோய் நம்பியார் இயக்கிய 'எதிரி 'என்ற குறும்படத்தில் காணப்பட்டார்.

Tags : Revathi, Kajol

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

REVATHI JOINS HANDS WITH SHAH RUKH KHAN HEROINE FOR HER NEXT

People looking for online information on Kajol, Revathi will find this news story useful.