'இனப்பெருக்கம்' பற்றி கேள்வி கேட்ட ரசிகர் - தரமான 'நச்' பதில் கொடுத்த சமந்தா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: நடிகை சமந்தாவிடம் ரசிகர் கேட்ட இனப்பெருக்கம் குறித்த சர்ச்சை கேள்விக்கு நச் என பதில் அளித்துள்ளார்.

REPRODUCE QUESTION SAMANTHA HITS BACK WITH A CLASSY REPLY
Advertising
>
Advertising

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.

சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

REPRODUCE QUESTION SAMANTHA HITS BACK WITH A CLASSY REPLY

விவாகரத்துக்கு பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. 

நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மற்ற Cast & Crew விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது சமூகவலைதளங்களில் முகம் காட்டும் சமந்தா, வீடியோக்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடல் செய்வார். இந்நிலையில் ரசிகர் எழுப்பிய ஒரு வித்தியாசமான சர்ச்சை கேள்வியை சம்ந்தா எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  ""நீங்கள் இனப்பெருக்கம் செய்தீர்களா, ஏனென்றால் நான் உங்களை மீண்டும் உருவாக்க விரும்புகிறேன்."" என சர்ச்சையாக கேள்வி எழுப்பினார். 

இதற்கு, சமந்தா பொருத்தமான மற்றும் கம்பீரமான பதிலைக் கொடுத்தார்.  "ஒரு வாக்கியத்தில் 'reproduce' என்பதை எவ்வாறு பயன்படுத்துவது. என்பதை முதலில் கூகிள் செய்து தெரிந்து கொண்டிருக்க வேண்டாமா?" என பதில் அளித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

REPRODUCE QUESTION SAMANTHA HITS BACK WITH A CLASSY REPLY

People looking for online information on Actress Samantha, Pushpa, Samantha, Samantha Fans will find this news story useful.