நேரடியாக OTT-யில் ரிலீசாகும் தமன்னா தனி ஹீரோயினாக நடிக்கும் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? தெறி FIRST LOOK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை தமன்னா நடிக்கும் பப்ளி பவுன்சர் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | BB Jodigal 2: மோதிரம் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணிய அமீர்.! கண் கலங்கிய பாவனி.!

பல தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மதுர் பண்டர்க்கார், பெண்களை முதன்மைப்படுத்தும் தனிச்சிறப்பு வாய்ந்த கதைகளை வழங்குவதில் மிகஉயரிய படைப்பாளியாக அறியப்படுகிறார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்சர்ஸ் இரண்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் வட இந்தியாவின் உண்மையான 'பவுன்சர் நகரமான' அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட  ஒரு பெண் பவுன்சரின் கற்பனைக் கதையாகும்.

தமன்னா நடிப்பில் பிப்ரவரி 18 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் நிறைவடைந்ததாக  நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும் இதில் சவுரப் சுக்லா அத்துடன் அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கதை மற்றும் திரைக்கதை: அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தின் முதல் இரண்டு லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களிலும் தமன்னா பாட்டியா பவுன்சர் சாயலில் தோன்றியுள்ளார்.

Also Read | பிரபல நடிகர் நடிகையுடன் மாலத்தீவில் நடிகை இலியானா.. இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ADVENTURE வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Release date of Director Madhur Bhandarkar Tamannaah next BABLI BOUNCER

People looking for online information on Babli Bouncer, Madhur Bhandarkar, Tamannaah, Tamannaah Bhatia, Tamannaah next Movie Updates will find this news story useful.